
தர்பார் படத்தை முடித்தவுடன் தலைவர் 168 நடிக்க தொடங்கியுள்ளார் ரஜினிகாந்த்.
இதில் ரஜினியுடன் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட மூன்று நாயகிகள் நடித்து வருகின்றனர்.
இந்த படம் கிராமத்து கதை என்பதால் மதுரை மாநகர் போல ஐதராபாத்தில் செட் போட்டு எடுத்து வருகிறார்களாம்.
இந்த செட்டில் ரஜினியுடன் மீனா, குஷ்பு ஆகியோர் நடித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகை குஷ்புவின் இளைய மகள் அனந்திதா, ரஜினியை சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.
இது குறித்து குஷ்பூ கூறியுள்ளதாவது…
அதில், என்னுடைய இளைய மகள் அனந்திதாவின் நீண்ட நாள் கனவு நிறைவேறியுள்ளது.
ரஜினியுடன் இணைந்து போட்டோ எடுத்துக் கொண்டு, அவரிடம் ஆசிர்வாதம் வாங்க வேண்டும் என நினைத்தார். அது நிறைவேறியுள்ளது.
இந்த நிகழ்வின் போது தனது இதயமே நின்று விட்டது போன்று உணர்ந்ததாக அனந்திதா தெரிவித்தார்.
அப்படியொரு மகிழ்ச்சியான தருணத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.
தன்னுடைய நேரத்தையும் செலவிட்ட ரஜினிக்கு என்னுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என குஷ்பு தெரிவித்துள்ளார்.
Kushboo daughter met rajinik in Thalaivar 168 shooting spot





