கனா, நெஞ்சுக்கு நீதி உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் தான் அருண்ராஜா காமராஜ். இவர் தனது அடுத்த படைப்பாக “லேபிள்” என்ற படைப்பை உருவாக்கியிருக்கிறார்.
இப்படமானது நேரடியாக டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் ரிலீஸாக இருக்கிறது. சில தினங்களுக்கு முன் வெளியான இதன் ட்ரெய்லர் அனைவராலும் பெரிதாக வரவேற்கப்பட்டது.
ஜெய், தன்யா ஹோப், மாஸ்டர் மகேந்திரன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இதில் நடித்துள்ளனர். வட சென்னையை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படமானது, வாழும் இடத்தின் அரசியலையும் வாழ்வியல் அரசியலையும் பேசியுள்ளது., அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் இதற்கு முன் வெளியான இரண்டு படங்களும் மக்களுக்கான படமாக உருவாகி அனைவரிடத்திலும் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளதால், இப்படத்திற்கும் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
சாம் சி எஸ் இசையமைத்துள்ள லேபிள் திரைப்படம், வரும் நவம்பர் மாதம் 10 ஆம் தேதி டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் ஸ்டிரீமிங் செய்யப்படவுள்ளது.