Spotlightசினிமாவிமர்சனங்கள்

லியோ – விமர்சனம் 3.25/5

இயக்கம்: லோகேஷ் கனகராஜ்

நடிகர்கள்: விஜய், த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய்தத், மிஷ்கின், சாண்டி, கெளதம் வாசுதேவ் மேனன்,

இசை : அனிருத்

ஒளிப்பதிவு: மனோஜ் பிரமஹன்சா

தயாரிப்பு: லலித்குமார்

கதை இமாச்சல் பிரதேசத்தில் நகர்கிறது. ஒரு மகன் ஒரு மகள் என தனக்கென ஒரு குடும்பமாய் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர் விஜய் – த்ரிஷா தம்பதி. அங்கு கேக் ஷாப் ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு நெருங்கிய நண்பராக வருகிறார் கெளதம் வாசுதேவ் மேனன். வனத்துறை அதிகாரியாக வருகிறார்.

கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளிகளான மிஷ்கின் கும்பல். கையில் பணம் இல்லாததால் பணத்திற்காக விஜய்யின் கேக் ஷாப்பிற்குள் நுழைந்துவிடுகிறார்கள். அங்கு நடக்கும் சண்டையில், ஐந்து பேரை சுட்டுக் கொன்று விடுகிறார் விஜய். இதனால் கைது செய்யப்படும் விஜய், பின்னர் மிஷ்கின் கும்பல் கொலைகாரர்கள் என்று தெரிந்ததும் விஜய்யை விடுவித்து விடுகிறார்கள்.

இந்த செய்தி நாளிதழ்களில் வெளிவர, விஜய்யின் புகைப்படமும் அதில் வருகிறது. இதனை பார்த்த அர்ஜுன் மற்றும் அவரது அண்ணன் சஞ்சய் தத் ஷாக் ஆகிறார்கள்.

விஜய்யை தூக்கி வர இமாச்சல் வருகிறார் சஞ்சய் தத்.

சஞ்சய் தத்திற்கும் விஜய்க்கும் என்ன சம்மந்தம்.?? த்ரிஷாவுடனான குடும்ப உறவிற்கு முன் விஜய் என்ன செய்து கொண்டிருந்தார்.??? லியோ யார்.??? என்பதே படத்தின் மீதிக் கதை.

தனி ஒருவனாக படத்தின் மொத்த கதையையும் தன் தோள் மீது சுமந்து நிற்கிறார் விஜய். பார்த்திபனாகவும் லியோவாகவும் ஸ்கிரீனில் அதகளம் செய்திருக்கிறார். கொண்டாட்டத்திற்கு எந்த வித குறையும் இல்லாமல் தனது ரசிகர்களுக்கு என்ன தேவையோ அதை தெளிவாக கொடுத்திருக்கிறார் விஜய். வழக்கம்போல், செண்டிமெண்ட், ஆக்‌ஷன் என இரண்டிலும் தான் தளபதி தான் என்று நிரூபித்திருக்கிறார்.

தனது அனுபவ நடிப்பை அளவாக கொடுத்து கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார் த்ரிஷா. வனத்துறை அதிகாரியான கெளதம், சொன்னதை செய்திருக்கிறார்.

வில்லன்களாக வரும் அர்ஜுன் மற்றும் சஞ்சய் தத் இருவரும் மேஜிக் செய்திருக்கிறார்கள். அர்ஜுனின் ஆக்‌ஷன் காட்சிகள் ரசிக்கும்படியாக இருந்தது.

மிஷ்கினின் காட்சியும் அதிரடி காட்டியிருக்கிறது. கார் ஸ்டண்ட் காட்சி சற்று காமெடியாக இருந்தது. மற்ற சண்டைக் காட்சிகள் வெறித்தனம்.

முதல் பாதியில் இருந்த ஒரு சுவாரஸ்யம் இரண்டாம் பாதியில் இல்லாதது ஏமாற்றம் தான். இரண்டாம் பாதியில் விஜய் தனது விஸ்வரூபத்தை காட்டி விளையாடிருந்தால் லியோ, வேற ரகமாக முத்திரை பதித்திருக்கும்.

அனிருத்தின் இசை மற்றும் பின்னணி இசையில் பெரிய குறை தான்.. முதல் முறையாக தனது இசையில் சறுக்கியிருக்கிறார் அனிருத்.

மனோஜ்ஜின் ஒளிப்பதிவு நச்.

வழக்கமான கதையாக தான் இருந்தது. ஒரு சில இடத்தில் மட்டுமே சின்ன சின்ன மாற்றங்கள். லோகேஷின் இயக்கத்தில் இதற்கு முன் வெளிவந்த படங்களின் சம்பவத்தில் லியோ சற்று ஏமாற்றம் தான்.

லியோ – விஜய்யின் ஆக்‌ஷன் ப்ளாக்…

Facebook Comments

Related Articles

Back to top button