Spotlightவிமர்சனங்கள்

லில்லி ராணி – விமர்சனம்

 

சாயா சிங், தம்பி ராமையா மற்றும் துஷ்யந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் “லில்லி ராணி”.

குறிப்பிட்ட சில படங்களில் மட்டுமே நடித்து வரும் சாயாசிங், இப்படத்தின் மூலம் மீண்டும் தோன்றியிருக்கிறார்.

கதைப்படி,

போலீஸாக வரும் தம்பி ராமையா விலைமாதுவான சாயாசிசிங் உடன் ஒருநாள் இருக்கிறார். சில மாதங்களுக்குப் பிறகு சாயாசிங் ஒரு குழந்தைக்கு தாயாகிறார். சில நாட்களில் அந்த குழந்தைக்கு மிகப்பெரும் பிரச்சனை ஒன்று வர, விரைவில் ஆப்ரேஷன் செய்ய வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்..

பல லட்சம் வரையில் செலவு ஏற்படும் என கூற, வேறு வழியின்றி உதவி தேடி தம்பி ராமையாவிடம் செல்கிறார் சாயா.

தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறும் தம்பி ராமையா, அமைச்சர் மகனாக வரும் துஷ்யந்தை வைத்து பணம் பறிக்க திட்டம் தீட்டுகின்றனர் சாயா சிங்கும் தம்பி ராமையாவும்.

இறுதியில் என்ன நடந்தது.? குழந்தை காப்பாற்றப்பட்டது என்பதே படத்தின் மீதிக் கதை.

கதையின் மூலக்கரு மிகவும் வலிமையாக இருந்தாலும், திரைக்கதை தொய்வடைந்ததால் படத்தின் மீதான ஈர்ப்பு குறைந்து போகிறது.

பல படங்களில் நடித்த அனுபவம் இருந்தாலும், இதுதான் தன்னுடைய முதல் படம் என்பது போல் போதுமான நடிப்பை கொடுக்க தவறியிருக்கிறார் சாயா சிங்.

படத்தின் காமெடி காட்சிகள் கதையின் போக்கை மடைமாற்றுகிறது.

கதைக்கு ஒட்டாத வசனங்களும் ஆங்காங்கே எட்டிப் பார்க்கின்றன.

ஓவர் ஆக்டிங்கை ஓவராகவே கொடுத்திருக்கிறார் தம்பி ராமையா..

லில்லி ராணி – தேன் இல்லா தேனீ..

Facebook Comments

Related Articles

Back to top button