Spotlightசினிமா

”என் பையனுக்கு காலேஜ் பீஸ் கட்டுவீங்களா..??” – நாஞ்சில் சம்பத்தின் மறுமுகம்!

 

ஆர் ஜே பாலாஜி மற்றும் ப்ரியா ஆனந்த் நடிப்பில் உருவாகியுள்ளது “LKG”. இப்படம் வரும் 22 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தில் ஜே கே ரித்திஷ், நாஞ்சில் சம்பத், ராம்குமார், உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

பிரபு இயக்கியுள்ள இப்படத்தினை ஐசரி கணேசன் தயாரித்துள்ளார்.

இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய ஆர் ஜே பாலாஜி, ‘ நான் இந்த தருணத்தில் இருவருக்கு மட்டும் முக்கியமாக நன்றி கூற கடமைப் பட்டிருக்கிறேன். சிவாஜி கணேசன் அவர்களின் புதல்வன் ராம்குமார் மற்றும் நாஞ்சில் சம்பத்.

ராம்குமார் சார் அவர்கள் ஒரு கலைக் குடும்பத்தில் இருந்து வந்தவர். இதுவரை அவர் இரண்டு படங்களில் மட்டுமே நடித்துள்ளார். நான் அவரிடம் கேட்டவுடன் உனக்காக நான் நடிக்கிறேன் பாலாஜி என்றார். அவருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இரண்டாவது நாஞ்சில் சம்பத் ஐயா அவர்கள், கதை எழுதி முடித்ததும் இப்படத்தில் ஐயா நீங்கள் தான் நடிக்க வேண்டும் என்று போனில் அழைத்து கூறிய போது நேரில் வாருங்கள் என்றார். நாங்கள் அவரது வீட்டிற்கு சென்றோம். பட்டினப்பாக்கத்தில் ஹவுசிங் போர்ட்டில் இருக்கும் அவரது வீடு 600 சதுர அடி மட்டுமே இருக்கும். அங்கு அவரிடம் கதை கூறியதும், நான் நடிக்கிறேன். எனது மகன் காலேஜ் பீஸ் கட்டுவதற்கு பணம் கொடுப்பீர்களா என்றார்.

எனக்கு ஒரே ஷாக். என்னடா இது அரசியலில் சேர்ந்த சில வருடங்களில் மகனுக்காக காலேஜ் கட்டிக் கொடுக்கும் அரசியல்வாதிகள் இருக்கும் இக்காலகட்டத்தில் மகனின் கல்லூரி பீஸ் கட்டிக் கொடுங்கள் என்று கேட்கிறாரே என்று.. 40 வருடங்கள் அரசியலில் வாழ்ந்த ஒரு தலைவனுக்கா இப்படி ஒரு நிலை.

இப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனின் ஒரு படத்திலும் நாஞ்சில் சம்பத் நடித்து வருகிறார். அரசியலில் தான் சம்பாதிக்கவில்லை. சினிமாவிலாவது அவர் சம்பாதிக்கட்டும்.’ என்றார்.

Facebook Comments

Related Articles

Back to top button