
பிக் பாஸ் சீசன் 3ல், தற்போது கிராமப்புற டாஸ்க் சென்று கொண்டிருக்கிறது. இதில் இரண்டு அணிகள் இரண்டு ஊர்களை சேர்ந்தவர்களாக பிரிக்கப்பட்டுள்ளனர்.
இதில், இயக்குனர் சேரன் நாட்டாமையாக வருகிறார். லாஸ்லியா, சேரனை அப்பா என்றே எப்போதும் அழைப்பார்.
இவ்வளவு பாசமாக இருக்கிறாரே என்று ரசிகர்கள், லாஸ்லியா மீது இரக்கம் கொண்டார்கள். நேற்று, நடந்த டாஸ்க்கில் மதுமிதாவுடன் ஏற்பட்ட பிரச்சனையால் ஆழ்ந்த சோகத்தில் இருந்தார் நடிகர் சேரன்.
சேரனின் சோகத்தை கண்டும் காணாமல் சென்று, ரசிகர்கள் அனைவரையும் கடும் கோபத்திற்கு உள்ளாக்கினார் லாஸ்லியா.
லாஸ்லியாவின் இந்த மாற்றத்திற்கு என்ன காரணமாக இருக்கும் என்று ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.
https://twitter.com/BiggBossTami3/status/1154306566885007361?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1154306566885007361&ref_url=https%3A%2F%2Fcinehitz.com%2Flosliyafans-down-cheran-hig-vote-in-this-week%2F





