Spotlightசினிமாவிமர்சனங்கள்

மாவீரன் – விமர்சனம் 3.5/5

ண்டேலா படத்திற்கு பிறகு இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் “மாவீரன்”. இப்படத்தில் சிவகார்த்திகேயன், அதிதி சங்கர், சரிதா, மிஷ்கின், சுனில், மோனிஷா உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

கதைப்படி,

சென்னை கூவக்கரையில் தனது அம்மா சரிதா மற்றும் தங்கை மோனிஷாவுடன் வாழ்ந்து வருகிறார் சிவகார்த்திகேயன். யாரிடமும் எந்த பகையும் வளர்த்துக் கொள்ளாமல், எதையும் சகித்துக் கொண்டு வாழும் கதாபாத்திரம் தான் சிவகார்த்திகேயனோடது.

காமிக் வரைபடம் வரையும் கதாபாத்திரம் தான் சிவகார்த்திகேயனோடது. தனது கலையில் சரியான அங்கீகாரம் கிடைக்காமல் இருந்து வருகிறார்.

கூவக்கரையோரம் இருப்பவர்களை அரசாங்கம் அப்புறப்படுத்தி, அடுக்குமாடி குடியிருப்பில் தங்க வைக்கிறது. அந்த குடும்பத்தில் சிவகார்த்திகேயன் குடும்பமும் இருக்கிறது.

புதிதாக வந்த கட்டிடத்தில் பல குறைகள் இருக்கிறது. கைதொட்ட இடங்களெல்லாம் பெயர்த்துக் கொண்டு வர, இதையும் சகித்துக் கொண்டு வாழவேண்டும் என்று சிவகார்த்திகேயன் கூறுகிறார். ஆனால், சரிதாவோ கோபம் கொள்கிறார்.

அதிதி சங்கரின் உதவியால், தினசரி பத்திரிகை ஒன்றில் சிந்துபாத் கதை போன்று மாவீரன் கதை ஒன்றை காமிக் கதையாக வரையும் வேலை கிடக்கிறது.

வேலை சுமூகமாக செல்லும் நேரத்தில், குடும்பத்தில் சிறு பிரச்சனை ஏற்பட தனது வீரமின்மையால் அவமானப்படுகிறார். தற்கொலை செய்யும் முடிவுக்கு செல்கிறார் சிவகார்த்திகேயன். அப்போது, எதிர்பாராத விதமாக கீழே விழ தலையில் பலமாக அடிபடுகிறது சிவகார்த்திகேயனுக்கு.

இந்த விபத்தில் இருந்து அவருக்கு வானில் இருந்து ஒரு குரல் கேட்டுக் கொண்டே இருக்கிறது. அந்த குரல் சொல்ல சொல்ல ஒவ்வொன்றாக செய்கிறார். சாதாரண மனிதன் மாவீரனாக அவதாரம் எடுக்கிறார்.

இதனால், குடிசை மாற்று வாரியத்தின் அமைச்சராக வரும் மிஷ்கினின் பகையை சம்பாதித்துக் கொள்கிறார் சிவகார்த்திகேயன்.

மாவீரனான சிவகார்த்திகேயன் மிஷ்கினை எப்படி எதிர் கொள்கிறார்.? அதன் பிறகு அவரது வாழ்வில் என்னென்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை..

ஒட்டுமொத்த கதையையும் தன் தோளில் சுமந்து நிற்கிறார் சிவகார்த்திகேயன். மற்ற படங்களில் இருந்து சற்று மாறுபட்ட தோற்றத்தில் நடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். இந்த கதாபாத்திரத்திற்கு இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அளவாக அளந்தெடுத்த நடிப்பைக் கொடுத்து அசத்தியிருக்கிறார். இப்படத்தில் சற்று தேர்ச்சியான நடிப்பையே கொடுத்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் என்று கூறலாம்.

கதாநாயகனாக வராமல் கதையின் நாயகனாகவே தோன்றி கதைக்கு உயிர் கொடுத்திருக்கிறார். பின்னணியில் வந்த விஜய் சேதுபதியின் வாய்ஸ் படத்திற்கு மிகப்பெரும் பலம். போகப் போக போர் அடித்துவிடுமோ என்று எண்ணிக் கொண்டிருந்த வேலையில், இவரின் குரல் படத்திற்கு பலமாகவே வந்து சேர்ந்தது. அதிதி சங்கர் சிவகார்த்திகேயனின் உறுதுணையாக வந்து கேரக்டராக கூடவே பயணம் செய்திருக்கிறார்.

படத்தின் கதாபாத்திர தேர்வில் எந்த தவறும் இல்லை. மிஷ்கினின் நடிப்பு சற்று சவரக்கத்தி படத்தில் பார்த்த கேரக்டரை மீண்டும் பார்ப்பது போன்று இருந்தது. இருந்தாலும் ஓகே என்று கடந்து சென்றுவிடலாம்.

சரிதா மற்றும் மோனிஷா இருவரும் கதாபாத்திரமாகவே வாழ்ந்துவிட்டார்கள். சரிதா தனது அனுபவ நடிப்பை கண்ணில் நிலைநிறுத்தியிருக்கிறார். மிஷ்கினோடு உடன் வரும் சுனிலின் நடிப்பும் பாராட்டும்படியாகவே இருந்தது.

பரத் ஷங்கரின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு பெரும் பலம். ஒரே படத்தில் வித்தியாசம் வித்தியாசமான இசை கொடுத்து ரசிகர்களை ரசிக்க வைத்திருக்கிறார்.

பல படங்களுக்குப் பிறகு யோகிபாபுவின் காமெடி அனைத்துமே ரசிக்கும்படியாக இருந்தது. வில்லனாக அருவி மதன் கலக்கியிருக்கிறார்.

விது அய்யண்ணாவின் ஒளிப்பதிவு டாப்… படகு சண்டை, மிஷ்கின் மற்றும் சிவகார்த்திகேயனின் சண்டைக் காட்சி, பில்டிங் இடிந்து விழும் காட்சி என படத்தில் வந்த காட்சிகள் அனைத்தையும் தத்ரூபமாக திரைக்கு கொண்டு வந்து ரசிக்க வைத்துவிட்டார் ஒளிப்பதிவாளர் விது அய்யண்ணா.

மண்டேலா படத்தில் எப்படி ஒரு உயிரோட்டமான கதையை எடுத்து உயிர் கொடுத்தாரோ அதேபோல் இந்த படத்திலும் உயிரோட்டமான ஒரு கதையை எடுத்து இதற்கும் தனது இயக்கத்தால் உயிர் கொடுத்திருக்கிறார். எந்த இடத்திலும் கதையை தொய்வடைய விடாமல் கைதட்டல் கொடுக்கும்படியான இயக்கத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் மடோன் அஸ்வின்.

இரண்டாம் பாதியில் இருக்கும் சின்ன சின்ன லேக்கை மட்டும் கலைந்திருக்கலாம்.

மாவீரன் – குரலைக் கேட்டு மக்களுக்காக நின்று, வென்ற வீரன்….

Facebook Comments

Related Articles

Back to top button