
ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ருக்மணி, வித்யூத் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் கடந்த வெள்ளியன்று திரைக்கு வந்த திரைப்படம் தான் மதராஸி.
திரைப்படத்தின் ட்ரெய்லர் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்நிலையில், படம் வெளியானவுடன் படத்திற்கு நல்லதொரு விமர்சனம் எழுந்து அனைத்து திரையரங்குகளிலும் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக படம் ஓடத் தொடங்கியது.
தொடர்ந்து வெள்ளி மற்றும் சனி இரண்டு நாட்களுமே அரங்குகள் நிறைந்த காட்சிகளாகத் தான் படம் ஓடிக் கொண்டிருக்கிறது.
வெள்ளி மற்றும் சனி இரு தினங்களில் மட்டும் சுமார் 50 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலை குவித்திருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தொடர்ந்து திரையரங்குகளுக்கு குடும்பம் குடும்பமாக ரசிகர்கள் கூட்டம் படையெடுத்த வண்ணம் இருப்பதால், காட்சிகளின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்கிறார்கள் திரையரங்குகளின் உரிமையாளர்கள்.
இன்னும் ஓரிரு தினங்களில் மதராஸி திரைப்படம் வசூலில் 100 கோடி க்ளப்பில் இணைய வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.