Spotlightசினிமா

மணிரத்னம் தயாரிப்பில் விக்ரம் பிரபு நடிக்கும் ‘ வானம் கொட்டட்டும்’!

ணிரத்னம் தனது மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்க அவரது இணை இயக்குனராக பணியாற்றிய தனா இயக்கத்தில் உருவாக இருக்கிறது ‘வானம் கொட்டட்டும்’.

இயக்குநர் தனாவுடன் மணிரத்னமும் கதை வசனம் எழுதி வரும் இந்த படத்தில் விக்ரம் பிரபு ஹீரோவாக நடிக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடிக்கிறார். மேலும் விக்ரம் பிரபுவின் தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறாராம். மேலும் சாந்தனு பாக்கியராஜ் ,சரத்குமார், ராதிகா சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கின்றனர்.

இந்த படத்துக்கு பிரபல பாடகர் சித் ஸ்ரீராம் இசையமைக்க, ‘அபியும் நானும் படத்துக்கு ஒளிப்பதிவு செய்த ப்ரீத்தா இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் இந்த படத்துக்கு கலை இயக்குநராக அமரனும், உடை வடிவமைப்பு பணிகளை ஏகா லகானியும் ஏற்றுள்ளனர்.

இயக்குநர் தனா ஏற்கனவே விஜய் ஜேசுதாஸை ஹீரோவாக வைத்து ‘படைவீரன்’ படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
Close
Close