Spotlightவிமர்சனங்கள்

மனுசங்கடா விமர்சனம் 2.75/5

சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் படத்தின் நாயகன் ராஜீவ் ஆனந்த்க்கு இரவு நேரத்தில் தகவல் வருகிறது, அவரது தந்தை இறந்துவிட்டார் என்று. மனம் உடைந்த ராஜீவ், தனது சொந்த கிராமத்திற்கு புறப்பட்டுச் செல்கிறார்.

தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ராஜீவ், தனது தந்தையின் சடலத்தை மேல் வீதி(வேற்று சாதியினர்) வழியாக தான் எடுத்துச் செல்ல வேண்டியுள்ள கட்டாயம். மேல் வீதியில் உள்ளவர்கள் கீழ் சாதியில் உள்ளவர்கள் மீது ஜாதி வன்மத்தை வெளிப்படுத்த அவர்களை அந்த வீதி வழியாக சடலத்தை எடுத்துச் செல்லக்கூடாது என தங்களது ஜாதி வெறியை காட்டுகின்றனர்.

இறுதியாக தனது தந்தையின் உடலை அந்த மேல் வீதி வழியாக நாயகன் ராஜீவ் எடுத்துச் சென்றாரா எனபதே படத்தின் மீதிக் கதை.

படத்தின் நாயகன் ராஜீவ் கதை என்ற உடலுக்கு ஒரு உயிரோட்டத்தை கொடுத்திருக்கிறார். தனது தந்தையின் பூத உடலை எடுத்துச் செல்ல அவர் படும் இன்னல்கள் கண்களில் ஒவ்வொரு நொடியும் கண்ணீரை வர வைக்கிறார். அநேக காட்சிகள் ஒரே டேக்கில் ஓகே செய்திருக்கிறார் நாயகன். அனுபவ நடிப்பாக காட்டியிருக்கிறார் இந்த அறிமுக நடிகர்.

காட்சிகளில் வரும், ஊர் நல்லவர், ராஜீவ்வின் நண்பர்கள், அவரது காதலி, வக்கீல் என அனைவரும் கதைக்கு ஏற்ற கதாபாத்திரங்கள் தான்.

இப்படியொரு கதையை எழுதியதற்காகவே இயக்குனருக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள்… அதையும் காட்சிப்படுத்திய விதம் இன்னும் அருமை. தமிழ்நாட்டில் பல இடங்களில் இன்னமும் அரங்கேறும் காட்சிகளை மிகவும் தெளிவாக திரைக்கதை அமைத்து கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர்.

தரணின் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு பலம்.

படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள்… அப்ளாஷ்.. யூகிக்க முடியாத ஒரு காட்சி…

ஜாதி பாகுபாடு பாராது, வேற்றுமையை அகற்று ஒன்றுபட வாழ்வோம்.. வாழும் வாழ்க்கை ஒன்றுதான் அதை மற்றவர்களுக்கு பயனுள்ளதாக வாழ்ந்து நாமும் நல்ல ஒரு பண்பாளனாக வாழலாம்…

மனுசங்கடா – வலித்தவர்கள் தலை குனிந்து தங்களுக்குள்ளே கேட்டுக் கொள்ளுங்கள்…

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
Close
Close