Spotlightசினிமாவிமர்சனங்கள்

மார்கழி திங்கள் – விமர்சனம் 2.75/5

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனராக திகழ்ந்த பாரதிராஜாவின் மகனான மனோஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் இந்த “மார்கழி திங்கள்”.

இந்த படத்தில் பாரதிராஜா, ரக்ஷனா, ஷியாம் செல்வன், சுசீந்திரன், அப்புகுட்டி, ஜார்ஜ் விஜய், சுப்பிரமணி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

கதைப்படி,

படத்தில் கதையின் நாயகர்களாக வரும் ஷியாம் செல்வன் மற்ற ரக்‌ஷனா இருவரும் ஒன்றாக படித்து வருகிறார்கள். படிக்கும் போதே இருவருக்கும் காதல் மலர்கிறது.

இவர்களின் காதல், ரக்‌ஷனாவின் தாத்தாவான பாரதிராஜாவிற்கு தெரிய வருகிறது. இருவரையும் அழைத்து கல்லூரி படிப்பை முடிக்கும் வரை இருவரும் சந்தித்துக் கொள்ளா வேண்டாம்.. அதன் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று கூறி விடுகிறார் பாரதிராஜா.

அதன் பின், அவர்கள் வாழ்வில் என்ன நடந்தது ?? இருவரும் வாழ்வில் இணைந்தார்களா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.

படத்தின் நாயகனான ஷியாம் செல்வன் கதைக்கேற்ற பொருத்தம் என்றாலும், நடிப்பில் இன்னும் சற்று பயிற்சி வேண்டும் என்பது போல் தோன்றியது. நாயகி ரக்‌ஷனா கதைக்கு என்ன தேவையோ அதை அழகாகவும் அளவோடும் கொடுத்து காட்சிகளை ரசிக்க வைத்திருக்கிறார்.

பாரதிராஜா மற்றும் சுசீந்திரன் தனது அனுபவ நடிப்பையும் இயக்கத்திறனின் நடிப்பையும் கொடுத்து அசத்தியிருக்கிறார்கள்.

பாரதிராஜாவின் முதுமை நடிப்பில் இல்லை என்றாலும் குரலில் அதிகமாகவே தெரிகிறது.. சிரமத்தின் குரலாக..

ஆமை வேகத்தில் நடக்கும் முதல் பாதியின் வேகத்தை சற்று நன்றாகவே விறுவிறுப்பாக மாற்றியிருக்கலாம்.

ஆணவ கொலை, சாதி வெறியாட்டம் இவற்றையெல்லாம் பேசத் துணிந்த இயக்குனர் இன்னும் அதை அழுத்தமாகவே கூறியிருந்திருக்கலாம்.. இருந்தாலும் எடுத்த முயற்சிக்கு இயக்குனர் மனோஜ் அவர்களை வெகுவாக பாராட்டலாம்..

இளையராஜாவின் இசையில் பின்னணி இசை ஓகே ரகம். ஒளிப்பதிவு கிராம அழகியலை அழகோடு காட்டியிருக்கிறது.

மொத்தத்தில்,

பெரிதாக இல்லை என்றாலும், எடுத்த முயற்சிக்கு பாராட்டுகள்.

Facebook Comments

Related Articles

Back to top button