
நடிகர்கள்: சாய் ஸ்ரீ பிரபாகரன், பாவல் நவகீதன், சிது குமரேசன், விக்னேஷ் ரவி, பாலாஜி வேலன், சுதா புஷ்பா, அபிநயா
எழுத்து & இயக்கம்: ஹரி கே சுதன்
தயாரிப்பாளர்: ஹரி கே ஹரசுதன்
ஒளிப்பதிவு: மணி சங்கர்
படத்தொகுப்பு: காமேஷ் & நிஷார் ஷெரீப்
இசை: அரவிந்த் கோபால கிருஷ்ணன் & பரத் சுதர்ஷன்
கன்னியாஸ்திரியாக இருக்கும் சாய் ஸ்ரீ, 5 வருடங்களுக்குப் பிறகு விடுமுறைக்கு தனது உறவு முறை தங்கை சிது குமரேசன் வீட்டிற்கு வருகிறார். அங்கு, தங்கை சிது குமரேசன் மற்றும் விக்னேஷ் ரவி இருவரும் லிவ்வின் முறையில் வசித்து வருகின்றனர்.
அதுமட்டுமல்லாமல், அங்கு மற்றொரு ஜோடியும் லிவ்வின் முறையில் இருக்கின்றனர். சாய் ஸ்ரீக்கு தனியாக ஒரு அறை கொடுத்து அங்கு தங்க வைக்கிறார் சிது குமரேசன்.
பைபிள் படிப்பதும், ப்ரேயர் பண்ணுவதுமாக சென்ற சாய் ஸ்ரீயின் முதல் நாள், இரண்டாவது நாளிலிருந்து சற்று மாறத் தொடங்கியது.

கன்னியாஸ்திரிக்காக இருந்த உடையை மாற்றி சுடிதார் அணியத் துவங்குகிறார். அதுமட்டுமல்லாமல், அவர் மற்ற பெண்களைப் போல் குடும்ப பெண்ணாக தனது இளமையை தொலைத்து விடக்கூடாது என்று கன்னியாஸ்திரி வாழ்க்கையிலிருந்து வெளியே வரத் துடிக்கிறார்.
இதனை தனது அம்மாவிடம் கூற, அவரோ சாய் ஸ்ரீ’யை அடித்து வீட்டை விட்டு வெளியேற்றி விடுகிறார். அதன் பிறகு சாய் ஸ்ரீ ஒரு வித்தியாசமான முடிவை எடுக்கத் துணிகிறார்.
அதன்பிறகு சாய் ஸ்ரீயின் வாழ்க்கை என்னவானது என்பதே படத்தின் மீதிக் கதை.
நாயகி சாய் ஸ்ரீ தனது மரியா என்ற கதாபாத்திரத்தை மிகவும் நேர்த்தியாகவும் கச்சிதமாகவும் செய்து முடித்திருக்கிறார். அதுவும் படத்தின் முதல் பாதியில் கண்களாலும், எமோஷ்னலாகவும் காட்சிகளை நன்றாகவே கடத்திருக்கிறார்.

உணர்வுகளை வெளிப்படுத்தும் விதம் நச்… சாய் ஸ்ரீயின் தங்கையாக நடித்திருந்த சிது குமரேசனும் பல காட்சிகளில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். கோபத்தில் ஆக்ரோஷமாக நடந்து கொள்ளும் காட்சியில் நன்றாகவே ஸ்கோர் செய்திருக்கிறார்.
யாருய்யா நீ இப்படி சாதாரணமா இந்த கேரக்டர செஞ்சிட்டு போய்ட்டே இருக்க அப்படின்னு சொல்ற மாதிரி நடிச்சிட்டு போய்ட்டாரு பாவல் நவகீதன். மிகவும் நீளமான வசனத்தை, சர்வ சாதாரணமா காட்சிகளுக்குள் கடத்திச் சென்று விட்டார்.
அவ்ளோ டிடெய்லா சொன்னாலும், இன்னும் கொஞ்சம் விளக்கியிருந்திருக்கலாமோ என்று தோன்றியது.

ஒரு மதத்தின் உணர்வை தொடுவதென்பது சாதாரண தைரியம் கிடையாது. அதை தொட்டிருக்கிறார் இயக்குனர். ஆனால், அவர்களின் உணர்வுகளை தொடுவது தவறு என்று தான் கூற வேண்டும்.
எந்த விதமான ஆசை, பாசத்திற்கெல்லாம் நமது வாழ்க்கையில் இடம் கிடையாது என்று தெரிந்து கொண்டு தான் பெண்கள் சிலர் கன்னியாஸ்திரியாக மாறுகிறார்கள். அவர்களின் நம்பிக்கையையும் அவர்களின் உணர்வுகளையும் சிதைக்கும் வண்ணம் இப்படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர்.
இயக்கத்திலும், திரைக்கதையிலும் தான் ஒரு சிறந்த இயக்குனர் என்பதை நிரூபித்த வேளையில், கதையில் சற்று கவனம் செலுத்தலாம்.
க்ளைமாக்ஸ் காட்சியில் கடற்கரையில் ஒலிக்கப்பட்ட இசை இன்னமும் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
ஒளிப்பதிவு படத்திற்கு பலமாக நின்றிருக்கிறது.
மரியா – இயக்கத்தில் கெட்டிக்காரன்… கதையில்.?





