Spotlightவிமர்சனங்கள்

மார்க் – விமர்சனம் 3.5/5

இயக்கம்: விஜய் கார்த்திகேயா

நடிகர்கள்: கிச்சா சுதீப், யோகி பாபு, விக்ராந்த், நவீன் சந்திரா, குரு சோமசுந்தரம்

தயாரிப்பு: சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம்

இசை: ஜெனிஸ் லோக்நாத்

ஒளிப்பதிவு: சேகர் சந்திரா

பெரிய ரவுடியான நவீன் சந்திரா, தனது தம்பி விக்ராந்த் ஒரு பெண்ணுடன் ஓடி விட்டதை அறிந்து மிகுந்த கோபம் கொள்கிறார். அவரை தீர்த்து கட்டவும் முடிவு செய்கிறார். பணத்திற்காக குழந்தைகளை கடத்தி, யாருக்கும் தெரியாத ஒரு இடத்தில் அடைத்து விடுகிறார் விக்ராந்த்.

குழந்தைகளை காப்பாற்ற களத்தில் இறங்குகிறார் சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ் அதிகாரியான கிச்சா சுதீப். அதே நேரம், விடிந்தால் முதல்வராக பதவியேற்கும் அரசியல்வாதியின் கொலை வீடியோ ஒன்று கடத்தப்பட்ட சிறுவனிடம் இருக்கும் போனில் இருக்கிறது. அதற்காக அந்த சிறுவர்களை கொல்ல போலீஸ் படையை அனுப்புகிறார் அரசியல்வாதி.

இறுதியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.

கதையின் நாயகனாக மிரட்டியிருக்கிறார் கிச்சா சுதீப். இப்படியொரு கதையில் இவரை விட்டு வேறு ஒருவரை நினைத்து கூட பார்க்க முடியாது என்று தோன்ற வைத்துவிட்டார். அப்படியொரு மிரட்டலை கொடுத்து அதகளம் செய்திருக்கிறார் கிச்சா சுதீப்.

ஆக்‌ஷன் காட்சிகள் ஒவ்வொன்றிலும் அப்படியான ஒரு மாஸ் எலிவேஷன் கொடுத்திருக்கிறார் கிச்சா. நவீன் சந்திராவும் இவருக்கு இணையான ஒரு வில்லத்தனத்தைக் கொடுத்திருக்கிறார். க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சியில் இருவருமே மிரட்டலாக நடித்திருக்கின்றனர்.

விக்ராந்த் தனக்குக் கொடுக்கப்பட்டதை அளவோடு செய்து, தனித்துவம் காட்டியிருக்கிறார். கிடைக்கும் கேரக்டரில் தன்னால் என்ன பெஸ்டாக கொடுக்க முடியுமோ அதை கொடுத்து வந்தால் நல்லதொரு பெயரை எடுக்கலாம் என்று நிரூபித்திருக்கிறார் விக்ராந்த்.

படத்தில் நடித்த மற்ற கதாபாத்திரங்களும் தங்களுக்கானதை அளவாக செய்து முடித்திருக்கின்றனர்.

பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவு இரண்டுமே படத்திற்கு பெரும் பலமாக வந்து நிற்கிறது.

மேக்ஸ் திரைப்படத்தில் இணைந்த அதே கூட்டணி தான் இந்த மார்க் படத்திலும் இணைந்துள்ளது. கதையிலும் நன்றாகவே மெனக்கெடல் செய்து படத்தினை தரமாகவே கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

மார்க் – ஹிட்

Facebook Comments

Related Articles

Back to top button