Spotlightவிமர்சனங்கள்

மிரள் – விமர்சனம் 3.5/5

றிமுக இயக்குனர் சக்திவேல் இயக்கத்தில் பரத், வானிபோஜன், கே எஸ் ரவிக்குமார் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் மிரள்.

ஏற்கனவே டிரைய்லர் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்ததால், படத்தின் மீதும் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது. அதே எதிர்பார்ப்போடு படத்திற்கு சென்ற நம்மை இப்படம் பூர்த்தி செய்ததா இல்லையா என்று விமர்சனம் மூலம் பார்த்துவிடலாம்.

கதைப்படி,

கணவனாக பரத், மனைவியாக வானிபோஜன் இவர்களுக்கு 6 வயதில் மகன் இருக்கிறார்.. சிவில் இஞ்சினியரான பரத் ஏதோ ஒரு மன அழுத்தத்தில் இருக்கிறார். வானிபோஜனும் எதையோ பார்த்து பார்த்து பயந்து கொள்கிறார்.

குல தெய்வம் கோவிலுக்குச் சென்று வழிபட்டால் நல்லது என்று கூறி வானிபோஜனின் சொந்த ஊரான கிராமத்திற்குச் செல்கிறார்கள் மூவரும்.

இரண்டு தினங்கள் அங்கு இருந்து குல தெய்வத்தை வழிபட்டு, அவசரமாக இரவு நேரத்தில் சென்னை திரும்புகின்றனர் பரத், வானிபோஜன் மற்றும் இவர்களது மகன்.

இரவில் செல்லும் வழியில், கார் பஞ்சர் ஆகிவிட.. அதற்காக கீழே இறங்குகிறார் பரத்.. அதன் பின் நடக்கும் மிரள வைக்கும் சம்பவங்களே இப்படத்தின் மீதிக் கதை.

இந்த சம்பவம் எதற்காக நடக்கிறது என்பதை க்ளைமாக்ஸில் ட்விஸ்ட் ஒன்றை வைத்திருக்கிறார் இயக்குனர்.

நாயகன் பரத்திற்கு இனி ஏறுமுகம் தான் என்று தான் கூற வேண்டும். காளிதாஸ் படத்தின் மாபெரும் வரவேற்பை தொடர்ந்து வெளியான மிரள் படத்திலும் தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் ரசிக்க வைத்திருக்கிறார். படத்தின் மொத்த கதையும் இவர் மீது நகர்வதால், படத்தில் ஸ்கோப் செய்யும் காட்சிகள் அதிகமாகவே இருந்தது. அதையும் கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார் பரத்.

நாயகி வானிபோஜன், காட்சிக்கு அழகு சேர்த்து தனது நடிப்பைக் கொடுத்திருக்கிறார். மிரள வைத்த ஒளிப்பதிவு, அசர வைத்த படத்தொகுப்பு, பயமுறுத்திய பின்னணி இசை என ஒவ்வொன்றும் படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்திருக்கிறது.

அடர் இருட்டில், காற்றாலை எழுப்பும் ஒரு விதமான சத்தம், நாம் அந்த பகுதியில் சிக்கிக் கொண்டால் என்ற உணர்வை ஒவ்வொரு காட்சியிலும் கொடுத்து சீட்டின் நுனியில் அமர்ந்து படம் பார்க்க வைத்து விட்டார் இயக்குனர் சக்திவேல்.

செம்மறி ஆட்டின் பார்வை, மாஸ்க், வீட்டின் பின்னால் இருந்த அந்த பொம்மை என பயமுறுத்தும் காட்சிகள் பலவற்றை இயக்குனர் சக்திவேல் இப்படத்தில் அதிகமாகவே வைத்திருக்கிறார்.

அதிலும், க்ளைமாக்ஸில் வைத்த ட்விஸ்ட் காட்சிகள் படத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளது. கே எஸ் ரவிக்குமார் க்ளைமாக்ஸில் பேசுவதை கொஞ்சம் தெளிவாக கொடுத்திருக்கலாம். 20 நாட்களில் மொத்த படப்பிடிப்பையும் முடித்து அசத்திய இயக்குனர் சக்திவேல், அதில் வெற்றியும் கண்டிருக்கிறார்.

பிரசாத்தின் பின்னணி இசை நச்
சுரேஷ் பாலாவின் ஒளிப்பதிவு செம
கலைவாணின் படத்தொகுப்பு ஷார்ப்

இவர்கள் மூவரும் படத்தின் பில்லர்கள் என்றே கூறலாம்.

மிரள் – உங்களை நிச்சயம் மிரட்டும்..

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
Close
Close