
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்க இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது ‘பிகில்’. படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.
இப்படத்தின் முதல் நாள் முதல் காட்சி பல திரையரங்குகளில் திருவிழா கொண்டாட்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
படத்தினை பார்த்த அனைவரும் ‘இது வேற லெவல்’ ஆட்டம் என்று புகழாரம் சூட்டி வருகின்றனர்.
அதே வேளையில், ரசிகர்கள் சிலர் ஆர்வக் கோளாறால் தனது கைப்பேசியில் படத்தினை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இதனால் படக்குழு மிகவும் அதிர்ச்சியாகியுள்ளது. ரசிகர்களே இப்படி இருக்கலாமா என்றெல்லாம் அனைவரும் கூறி வருகின்றனர்.
இதற்கு தமிழ்ராக்கர்ஸ் எவ்வளவோ பரவா இல்லை என்றும் கூறுகின்றனர் சில ரசிகர்கள்.
Facebook Comments





