Spotlightசினிமா

”மிஸ்டர் லோக்கல்” படத்தில் சிவகார்த்திகேயன் என்ன சொல்ல வருகிறார்

ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார் என்ற செய்தி வந்ததுமே அந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு எகிற ஆரம்பித்து விட்டது.

இந்நிலையில், நேற்று முன்தினம் படத்தின் டீசர் வெளியானது, படத்தின் மீதான எதிர்பார்ப்பு இரண்டு மடங்காகி விட்டது.

இந்த மிஸ்டர் லோக்கல் டீஸரில் பிரதான கதாபாத்திரங்களான மனோகர் (சிவகார்த்திகேயன்) மற்றும் கீர்த்தனா (நயன்தாரா) ஆகியோரிடையே உள்ள மோதல்கள் மிகத்துல்லியமாக சித்தரிக்கப்பட்டுள்ளன.

மேலும், சிவகார்த்திகேயனின் கதாபாத்திரத்தில் அவரது நகைச்சுவை உணர்வும், மாஸ், ரொமண்ஸ், ஆக்‌ஷன் என அனைத்தும் கச்சிதமாக எடுக்கப்பட்டுள்ளது. நயன்தாராவின் அழகும் படத்தின் காட்சிக்கு மேலும் பலம்.

ஸ்டேட்டஸ் பார்க்கும் தொழிலதிபராக வளரும் நயன்தாராவிற்கும், லோக்கலாக இருக்கும் சிவகார்த்திகேயனும் நடக்கும் மோதலாக இந்த “மிஸ்டர் லோக்கல்” படத்தை எதிர்பார்க்கலாம்.

ஹிப் ஹாப் தமிழாவின் கவர்ந்திழுக்கும் பின்னணி இசையும் டீஸரில் கூடுதல் சிறப்பு.

மே 1ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ள மிஸ்டர் லோக்கல் படத்தை ஸ்டுடியோகிரீன் ஃபிலிம்ஸ் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்திருக்கிறார். ராதிகா சரத்குமார், தம்பி ராமையா, யோகிபாபு, சதீஷ் மற்றும் சில முக்கிய நடிகர்கள் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள்.

தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவில், விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ரோகேஷ், மிர்ச்சி விஜய் மற்றும் கே.ஆர்.தரண் பாடல்களை எழுதியுள்ளனர். தினேஷ்குமார் நடனத்தையும், அன்பறிவு சண்டைப்பயிற்சியையும் கவனிக்கின்றனர்.

https://www.youtube.com/watch?v=SHB8EcnAG0k

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
Close
Close