Spotlightசினிமா

என்ன பாட்டுங்க இது இப்படி இருக்கு… விமர்சனத்திற்கு உள்ளான கருப்பு பட பாடல்!!

ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்க உருவாகி வருகிறது கருப்பு. இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார் சாய் அபயங்கர்.

படத்தின் முதல் பாடல் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த நிலையில், இரண்டாம் பாடலான “நாங்க நாலு பேரு” பாடல் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென வெளியானதால் ரசிகர்களுக்கு பெரிய சர்ப்ரைஸாக அமைந்தது.

இந்த பாடல் படத்தில் ஒரு மாஸ் வில்லன் இன்ட்ரோ பாடல் ஆக அமைந்திருந்த நிலையில், பாடல் வரிகளை நசுக்கும் விதமாக பின்னணி இசை மிகப்பெரும் அளவில் ஒலித்ததால், படம் முழுக்க இரைச்சல் மட்டுமே இருந்தது.

இந்த பாடலை சிம்பு பாடியிருக்கிறார் இல்லை இல்லை வாசித்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்… அப்படியான நடை தான் இந்த பாடலில் இருந்தது.

இந்த பாடல் தற்போது இணையத்தில் அனைவராலும் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. சூர்யா ரசிகர்கள் பலருக்கும் பெரும் ஏமாற்றமாக மாறியிருக்கிறது இந்த பாடல். அடுத்த பாடலையாவது நன்றாக கொடுங்கள் என்று ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் வழியாக கோரிக்கை வைத்து வருகின்றனர்..

Facebook Comments

Related Articles

Back to top button