வாரம் வெள்ளிக்கிழமையானால் புது சினிமாக்கள் திரையரங்கை ஆக்கிரமித்துக் கொள்ளும்.
அதில் நல்ல படம் எதுவோ, அது தனக்கான இலக்கை நோக்கி வெற்றிப் பயணம் மேற்கொள்ளும்.
அந்த வரிசையில் இந்தவாரம், ஆதி நடிப்பில் உருவாகியிருக்கும் வீரன், ஆர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் காதர்பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் மற்றும் சண்டியர் ஜெகன் நடிப்பில் உருவாகியிருக்கும் துரிதம் உள்ளிட்ட மூன்று படங்கள் இன்று வெளியாகியுள்ளன.,
இதில், வீரன் மற்றும் காதர்பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் ஆகிய இரு படங்களும் எதிர்பார்த்த அளவிற்கு பெரிதான ஒரு வரவேற்பைக் கொடுக்காமல் போய்விட்டது. மற்றொரு படமான துரிதம் நல்லதொரு விமர்சனத்தைப் பெற்றுள்ளது.
இதனால், இந்த வாரம் வெற்றி வாகை சூடிய படங்களின் வரிசையில் துரிதம் முதல் இடத்தையும் வீரன் இரண்டாவது இடத்தையும் காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது.