Spotlightசினிமா

‘தி பாரடைஸ்’ படப்பிடிப்பில் இணைந்த நானி

ஹைதராபாத்தில் நாற்பது நாட்கள் நடைபெறும் ஸ்ரீகாந்த் ஓடேலா – சுதாகர் செருகுரி- SLV சினிமாஸ் – கூட்டணியில் தயாராகும் ‘ தி பாரடைஸ்’ படத்தின் படப்பிடிப்பில் நானி இணைந்திருக்கிறார். மேலும் இந்த திரைப்படம்- அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 26 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது

இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலாவின் கனவு படமான ‘ தி பாரடைஸ்’ படத்தின் படப்பிடிப்பில் ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி இணைந்திருக்கிறார். இந்த திரைப்படத்தை SLV சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி தயாரிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் 21ஆம் தேதியன்று தொடங்கியது. இதனைத் தொடர்ந்து  நானி இன்று படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.

ஹைதராபாத்தில் நடைபெறும் நாற்பது நாட்கள் கொண்ட இந்த படப்பிடிப்பில் முன்னணி நடிகர்களும் கலந்து கொள்கிறார்கள். இதற்காக ஹைதராபாத்தில் ஒரு பிரம்மாண்டமான மற்றும் கரடு முரடான பின்னணியில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு ,மலையாளம், கன்னடம், இந்தி, வங்காளம், ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் என பன்மொழிகளிலும் இப்படம் வெளியாகிறது.

2026 மார்ச் மாதம் 26 ஆம் தேதியன்று ‘தி பாரடைஸ் ‘ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்பதை தயாரிப்பாளர்கள் மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளனர்.

தொழில்நுட்பக் குழு :
எழுத்து & இயக்கம் : ஸ்ரீகாந்த் ஓட்டேலா
தயாரிப்பாளர் : சுதாகர் செருகுரி
தயாரிப்பு நிறுவனம் : SLV சினிமாஸ்
இசை : அனிருத் ரவிச்சந்தர்
படத்தொகுப்பு : நவின் நூலி
தயாரிப்பு வடிவமைப்பாளர் : அவினாஷ் கொல்லா
ஆடியோ : சரிகம மியூசிக்
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெட்டிங் : ஃபர்ஸ்ட் ஷோ

Facebook Comments

Related Articles

Back to top button