Spotlightவிமர்சனங்கள்

நானும் சிங்கிள் தான் – விமர்சனம் 3.25/5

தினேஷ், ஆதித்யா கதிர், விகாஷ் சம்பத் மற்றும் செல்வேந்திரன் ஆகிய நால்வரும் நெருங்கிய நண்பர்கள். எந்த பெண்களும் ஏறெடுத்தும் பார்க்காத 90’S கிட்ஸ் இவர்கள். தினேஷ் டாட்டூ குத்தும் தொழில் செய்து வருகிறார்.

நாயகி தீப்தி சதி, வெளிநாட்டில் சென்று வேலை பார்ப்பதை குறிக்கோளாக வைத்திருக்கிறார்.

நாயகியை பார்த்ததும் நாயகன் தினேஷ்க்கு காதல் மலர்கிறது. தினேஷின் நட்பை ஏற்றுக் கொண்ட தீப்தி, காதலை ஏற்க மறுக்கிறார்.

இந்நிலையில், லண்டனில் பணிக்கு செல்கிறார் தீப்தி. தீப்திக்காக தினேஷும் அவரது நண்பர்களும் லண்டன் செல்கின்றனர்.

காதலுக்கு ஐடியா கொடுக்கிறார் மொட்டை ராஜேந்திரன். இந்நிலையில், தீப்தியின் வேலை தினேஷால் பறிபோய்விடுகிறது. ஒட்டுமொத்தமாக தினேஷை வெறுக்கிறார்.

இறுதியாக தினேஷின் காதல் என்னவானது..? சிங்கிள் கமிட் ஆனாரா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.

நாயகன் தினேஷ் வழக்கம்போல், கண் இமைக்காமல், சிரிக்காமல், நடித்திருக்கிறார். காதல் காட்சிகளில் திறமையை காட்டியிருக்கிறார் தினேஷ். சண்டைக் காட்சிகளிலும் மிரட்டியிருக்கிறார்.

நாயகி தீப்திக்கு மிகப்பெரும் கேரக்டர் கொடுக்கப்பட்டுள்ளது. தனக்கான பணியை மிகவும் சிறப்பாக செய்து முடித்திருக்கிறார். டான்ஸ், சிரிப்பு, அழுகை என அனைத்திலும் ஸ்கோர் செய்திருக்கிறார்.

நாயகனின் நண்பனாக வரும் ஆதித்யா கதிரின் கவுண்டர் காமெடிகள் பல இடங்களில் சிரிப்பை எட்டி பார்க்க வைக்கிறது. ஒரு சில இடங்களில் வரும் இரட்டை அர்த்த காமெடிகள் முகம் சுழிக்க வைக்கிறது.

விகாஷ் சம்பத் மற்றும் செல்வேந்திரன் ஆகிய இருவரும் தனக்கான பணியை நன்றாக செய்து முடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு கலர்புல்.. அதிலும் லண்டன் காட்சிகளை மிகவும் நேர்த்தியாக கையாண்டிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஆனந்தராஜ்.

ஹித்தேஷ் மஞ்சுநாத் இசையில் நாயகியின் இண்ட்ரோ பாடல் தவிர மற்ற பாடல்கள் எடுபடவில்லை. பின்னனி இசை ஓகே ரகம் தான்.

ஆண்டனியின் படத்தொகுப்பு நச்..

கனல்கண்ணன், ஆடம் ரிச்சட்ஸின் சண்டைக் காட்சிகள் மிரட்டல்.

நல்ல கலகலப்பான காதல் கதையை எடுத்து இயக்கிய கோபிக்கு வாழ்த்துகள்…

வெளிநாட்டில் ஒரு தனியா நிறுவனத்தில் புகுந்து அனைவரையும் அடித்து, போலீஸில் சிக்காமல் நாயகன் இந்தியா வருகிறார் எப்படி..??

சின்ன சின்ன லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும்,கலகலப்புக்கு பஞ்சம் இல்லாத படம் தான் ‘நானும் சிங்கிள் தான்’..

நானும் சிங்கிள் தான் – காமெடிக்கு கிங்கு தான்…

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
Close
Close