Spotlightசினிமா

நயன்தாராவை அசிங்கப்படுத்திய ராதாரவி.. பதிலடி கொடுத்த விக்னேஷ்சிவன்!

நயன்தாரா நடித்த கொலையுதிர் காலம் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் ராதாரவி நயன்தாராவை பற்றி கீழ்த்தரமாக பேசினார்.

வீடியோ:

https://www.youtube.com/watch?v=jvY73RxDw2U

இதை பார்த்த இயக்குநர் விக்னேஷ் சிவன் கோபம் அடைந்து ராதாரவியை விளாசி ட்வீட் போட்டுள்ளார். ட்விட்டரில் விக்னேஷ் சிவன் கூறியிருப்பதாவது,

பாரம்பரிய குடும்பத்தில் இருந்து வரும் இவர் மீது நடவடிக்கை எடுக்க மாட்டார்கள். கவனத்தை ஈர்க்க அவர் இப்படி பேசிக் கொண்டிருக்கிறார், மூளையில்லாதவர். அவர் பேசியதை கேட்டு பார்வையாளர்கள் கைதட்டியதையும், சிரித்ததையும் பார்க்க கவலையாக உள்ளது.

முடியாத படம் தொடர்பாக இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்தது குறித்து எங்களுக்கு தெரியாது. சில ஆண்டுகளுக்கு முன்பே படத்தின் நிஜ தயாரிப்பாளர்கள் அல்லது இயக்குநர் வெளியேறிவிட்டார்கள் என்று நினைக்கிறேன். என்ன பேசுகிறோம் என்பது தெரியாதவர்களை வைத்துக் கொண்டு தேவையில்லாத நிகழ்ச்சி.

கண்டதையும் வாந்தி எடுக்கும் வேலையில்லாதவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் இது போன்ற நிகழ்வுகளில் இருந்து ஒதுங்கியே இருப்பது நல்லது. நடிகர் சங்கம் அல்லது எந்த சங்கத்தினரும் அவர் மீது நடவடிக்கை எடுக்க மாட்டார்கள் என்கிறார் விக்னேஷ் சிவன்.

 

Facebook Comments

Related Articles

Back to top button