Spotlightவிமர்சனங்கள்

நாட் ரீச்சபுள் விமர்சனம் 3/5

 

இயக்குனர் சந்துரு முருகானந்தம் இயக்கத்தில் விஷ்வா, சாய் தன்யா, விஜயன் நடிக்க உருவாகியிருக்கும் படம் தான் “நாட் ரீச்சபுள்”.

கதைப்படி,

எமர்ஜென்சி போன் ஒன்று காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு வருகிறது. அந்த எண்ணை கண்டறிந்து, லோகேஷனுக்கு செல்கிறது காவல்துறை.

அங்கு ஒரு பெண் தூக்கில் தொங்கியபடியும், மற்றொரு பெண் மண்ணில் புதைபட்டும் பிணமாக இருக்கின்றனர்.

இதனால் அதிர்ச்சயடைந்த எஸ் ஐ சுபா, வழக்கை தீவிரமாக விசாரணை செய்ய ஆரம்பிக்கிறார்.

உடன் சுபாவின் முன்னாள் கணவரும் இன்ஸ்பெக்டருமான விஷ்வாவும் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று கோவை கமிஷ்னர் உத்தரவு பிறப்பிக்கிறார்.

சஸ்பென்ஷனில் இருந்தாலும், கமிஷ்னருக்காக இந்த வழக்கை விசாரிக்கத் துவங்குகிறார் விஷ்வா.

இந்த கொலைகள் யார் செய்தது.?
எதற்காக செய்தார்கள் ? இதன் பின்னணி என்ன என்பதே படத்தின் மீதிக் கதை…

நாயகன் விஷ்வா, தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார். நாயகி சுபாவும் மிடுக்காக தனது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்.

முக்கியமான கதாபாத்திரத்திலும் கதையின் தூணாகவும் நின்று மிரட்டியிருக்கிறார் சாய் தன்யா..

மாணவியாகவும், மன நிலை சரியில்லாத போதும், அதன் பிறகு எடுத்த தோற்றமும் கதையின் ஓட்டத்திற்கு நன்றாகவே ஈடு கொடுத்தது.

ஆரம்பத்தில் ஏனோவென்று சென்று கொண்டிருந்த கதையில், யார் இந்த கொலையை செய்வது என அறிந்ததும் கதையில் புது பாய்ச்சல் ஆரம்பிக்கிறது.

க்ளைமாக்ஸில் வைக்கப்பட்ட காட்சியை மட்டும் சற்று இயக்குனர் யோசித்திருந்திருக்கலாம்… அது தான் முடிவு என்றல்ல.. திரைக்கதையில் இன்னும் சற்று கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

மற்றபடி, நாட் ரீச்சபுள் – பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத படம் தான்

எழுத்து , இயக்கம் .படத்தொகுப்பு -சந்துரு முருகானந்தம்

ஒளிப்பதிவு – சுகுமாரன் சுந்தர் காட்சிகளை கட்சிதமாக கொடுத்திருந்தார்…

சரண் குமாரின் இசையில் பின்னணி இசை கதையோடு பயணம்..

சவுண்ட் டிசைன் – விக்னேஷ் பாஸ்கரன் ,
VFX – ஹரிஹரன் . R & சந்துரு முருகானந்தம் ,
வண்ணம் -ஸ்ரீகாந்த் ரக்து
கலை இயக்கம் – ஜெகதீஷ்

Facebook Comments

Related Articles

Back to top button