பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ், மற்றும் லெமன் லீப் கிரியேசன்ஸ் கணேசமூர்த்தி இணைந்து தயாரிக்கும் படப்பிடிப்பு இன்று முதல் துவங்குகிறது.
கிரிக்கெட் விளையாட்டை மையமாகக்கொண்ட இந்தபடத்தில் அசோக்செல்வன், சாந்தனு பாக்யராஜ், ப்ரித்வி பாண்டியராஜன் கீர்த்திபாண்டியன் , திவ்யா துரைசாமி, உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
இயக்குனர் பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஜெய்குமார் இந்த படத்தை இயக்குகிறார்.
O2 , தம்மம் படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய தமிழழகன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.
அரக்கோணம் சுற்றுவட்டாரபகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடக்கிறது. தமிழகத்தின் நகரங்கள் , ஊர்களின் கிரிக்கெட் விளையாட்டின் உணர்வுப்பூர்வமான ஒரு வாழ்வியலையும் , நட்பு , கொண்டாட்டங்களையும் ஜனரஞ்சகமாக அனைவரும் ரசிக்கும் படியான கதையமைப்பில் உருவாக்கி இன்று முதல் படப்பிடிப்பை துங்குகிறார்கள்.
திரைக்கதை வசனம், – தமிழ்பிரபா மற்றும் ஜெய்குமார்..
இயக்கம் – ஜெய்குமார். தயாரிப்பு-
லெமன் லீப் கிரியேசன்ஸ் கணேசமூர்த்தி,
நீலம் புரொடக்சன்ஸ் பா.இரஞ்சித்
கலை – ரகு
எடிட்டிங் – செல்வா RK
உடைகள்- ஏகாம்பரம் .
ஸ்டில்ஸ் – ராஜா
பி ஆர் ஓ – குணா.