
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உருவாகியுள்ளது ‘கர்ணன்’. இப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்திருக்கிறார்.
சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். லால், நட்டி, யோகிபாபு என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.
நேற்று முன்தினம் ‘பண்டாரத்தி புராணம்’ என்ற பாடலை வெளியிட்டனர் படக்குழுவினர். தேனிசை தென்றல் தேவாவின் குரலில் வெளிவந்த இப்பாடல் அநேக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
யூ டியூப்பில் தற்போது வரை ட்ரெண்டிங்கில் நம்பர் ஒன் -ல் இருந்து வருகிறது. சுமார் 33 லட்சம் பார்வையாளர்களை கடந்து சென்றுள்ளது இந்த பாடல்.
அதற்கு சில தினங்களுக்கு முன் வெளியான கண்டா வரச் சொல்லுங்க பாடல் சுமார் 1.3 கோடி பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Facebook Comments