இயக்குனர் முருகன் இயக்கத்தில் நடிகர்கள் தமன் குமார், ஸ்வேதா டாரதி, ப்ளாக் பாண்டி, ரஞ்சனா நாச்சியார், யோகி ராம் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் பார்க்.
இப்படத்தினை லையன் நட்ராஜ் தயாரித்திருக்கிறார். ஒளிப்பதிவு செய்திருக்கிறார் பாண்டியன் குப்பன்.
இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் ஹமரா.
கதைக்குள் பயணிக்கலாம்..
நாயகன் தமன்குமார், தனது தாயுடன் திருவண்ணாமலையில் வசித்து வருகிறார். வழக்கம் போல், நாயகி ஸ்வேதா டாரதியை கண்டதும் காதல் கொள்கிறார்.
தொடர்ந்து ஸ்வேதா பின்னால் சுற்றிக் கொண்டே காதல் செய்த தமன், அதை இருதலை காதலாக மாற்றி விடுகிறார்.
இந்நிலையில், ரெளடியாக வரும் யோகிராமிற்கு பயந்து சீல் வைக்கப்பட்ட பார்க் ஒன்றில் தஞ்சம் புகுந்து விடுகிறது. அந்த பார்க்கில் இரண்டு அமானுஷ்யம் அங்கிருக்கும் மக்களை தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது.
இந்த நிலையில், பார்க்குக்குள் சென்ற ஜோடியையும் அச்சுறுத்தி அவர்களின் உடம்பிற்குள் அந்த அமானுஷ்யங்கள் ஏறிவிட அதன்பின் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதையாக இயக்கியிருக்கிறார் இயக்குனர்.
படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை அளவோடு செய்து முடித்திருந்தார்கள்.
அதுமட்டுமல்லாமல், நாயகன் மற்றும் நாயகிக்கான கெமிஸ்ட்ரி படத்தின் கதைக்கு பெரிதாகவே கைகொடுத்திருக்கிறது.
திரைக்கதை படுவேகமாக நகர்வதால், படத்தில் எந்த இடத்திலும் தொய்வு ஏற்படாத வண்ணம் கவனித்திருக்கிறார் இயக்குனர்..
கதையில் இன்னும் சற்று மெனக்கெடல் செய்திருந்தால், பார்க் பெரிதாகவே நம்மை கவர்ந்திருக்கலாம்.
அடுத்த என்ன நிகழும் என்பதை படம் பார்க்கும் ரசிகர்கள் எளிதில் புரிந்து கொள்ள முடிவதால் சற்று அந்த இடத்தில் சலிப்பு ஏற்பட்டு விடுகிறது.
பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவு படத்திற்கு பெரும் பலமாக இருக்கிறது.
மொத்தத்தில்,
பார்க் – குறைகள் ஆங்காங்கே எட்டிப் பார்த்தாலும் நிறைகள் நம்மை நிறைவாக்கவே செய்திருக்கிறது.