Spotlightவிமர்சனங்கள்

பருத்தி – விமர்சனம் 2.5/5

குரு அவர்களின் இயக்கத்தில் சோனியா அகர்வால், குட்டிப்புலி சரவண சக்தி, திலீப்ஸ், வர்ஷிட்டா, சுகன்யா உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் பருத்தி.

இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார் ரஞ்சித் வாசுதேவன்.

தயாரித்திருக்கிறார் Kodanda & Co, Latchu Ganesh.

ஒரு அழகிய கிராமத்தில் கதை நகர்கிறது. கணவனை இழந்த சோனியா அகர்வால் தனது உறவுக்காரர் ஒருவருடன் ஊருக்கு ஒதுக்குப்புறமாக தங்கி வருகிறார். யாருமில்லா ஒரு தனிமை வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

மற்றொருபுறம், மாஸ்டர் திலீப்ஸ் சாதி ஏற்றத்தாழ்வு பாகுபாட்டில் சிக்கி சின்னாபின்னமாகிறார். தனது பாட்டியுடன் வாழ்ந்து வருகிறார் திலீப்ஸ். தனக்கு இருக்கும் ஒரே சந்தோஷம் தனது பள்ளி தோழியான வர்ஷிட்டா தான் என்று எண்ணுகிறார்.

இருவரும் நெருங்கிய நண்பர்களாக பழகி வருகின்றனர். ஆனால், வர்ஷிட்டாவின் வீட்டிற்குள் திலீப்ஸ் நுழைய அனுமதி இல்லை. காரணம் சாதிய பாகுபாடு தான்..

ஒரு கட்டத்தில் சோனியா அகர்வால் தான் தனது அம்மா என்று தெரிந்து கொண்ட திலீப்ஸ், எதற்காக தாய் தன்னை வெறுத்து தூக்கியெறிந்தார் என்று கவலையடைகிறார்.

எதற்காக பெற்ற மகனை விட்டு பிரிந்து ஒரு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் சோனியா அகர்வால்.? சாதிய ஒடுக்குமுறைக்குள் சிக்கிய திலீப்ஸ் அதிலிருந்து மீண்டாரா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.

இதுவரை இப்படியொரு கதாபாத்திரத்தில் சோனியா அகர்வால் நடித்ததே இல்லை என்று தான் கூற வேண்டும். விவசாயம் செய்து கொண்டு, எப்போதும் கவலையுற்ற ஒரு பெண்ணாக அந்த கதாபாத்திரமாகவே மாறி, அனைவரையும் நடிப்பால் வெகுவாகவே ஈர்த்துவிட்டார் சோனியா அகர்வால்.

தனது மகனை விட்டு ஒவ்வொரு நாளையும் அவர் வேதனையுடன் கடக்கும் காட்சிகளை பார்க்கும் போது நமக்கே கண்கள் கலங்குகின்றன. அப்படி ஒரு நடிப்பு கொடுத்திருக்கிறார்.

ஒரு சில காட்சிகளில் சற்று ஓவர் ஆக்டிங் எட்டிப் பார்த்தாலும், பல இடங்களில் கைதட்டல் கொடுக்கும் நடிப்பைக் கொடுத்திருக்கிறார் திலீப்ஸ்.

இவரது தோழியாக நடித்த வர்ஷிட்டாவும் நடிப்பை அளவோடு கொடுத்திருக்கிறார். நல்லதொரு கதையை கையில் எடுத்து அதை திறம்பட கையாண்டு படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

துணிச்சலான ஒரு கதையை எடுத்ததற்காகவே இயக்குனரை வெகுவாக பாராட்டலாம். க்ளைமாக்ஸ் காட்சியை இன்னும் சற்று செதுக்கியிருக்கலாமே என்றும் கூற வைத்துவிட்டார் இயக்குனர்.

பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவு இரண்டும் படத்திற்கு ஆறுதல் தான்.

பருத்தி – சாதிய பாகுபாடு குறித்த ஒரு பாடம்..

Facebook Comments

Related Articles

Back to top button