Spotlightவிமர்சனங்கள்

ரெட்ட தல – விமர்சனம் 3.5/5

கிறிஸ் திருகுமரன் அவர்களின் இயக்கத்தில் அருண் விஜய், சித்தி இதானி, தன்யா ரவிச்சந்திரன், யோகி சாமி, ஜான் விஜய், ஹரிஷ் பெராடி, பாலாஜி முருகதாஸ் இவர்களின் நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் படம் தான் ரெட்ட தல.

இந்த படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார். டிஜோ டாமி என்பவர் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். அந்தோணி படத்தொகுப்பு செய்திருக்கிறார்.

பி டி ஜி யுனிவர்சல் சார்பில் பாபி பாலச்சந்திரன் இந்த திரைப்படத்தை தயாரித்திருக்கிறார்.

பாண்டிச்சேரியில் கதை ஆரம்பமாகிறது. சிறுவயதில் இருந்தே அருண் விஜய் (காளி) மற்றும் சித்தி இதானி இருவரும் நெருங்கிய நண்பர்கள். பல வருடங்கள் நண்பர்களாக இருந்து, பின் பிழைப்பிற்காக அருண் விஜய் வேறு ஒரு இடத்திற்குச் சென்று விடுகிறார்.


சில வருடங்கள் கழித்து மீண்டும் தனது தோழியான சித்தி இதானியை சந்திக்க வருகிறார். கஃபே ஒன்றில் வெயிட்டராக பணியாற்றி வருகிறார் சித்தி இதானி. வாழ்வதற்கு பணம் மட்டுமே வேண்டும் என்று நன்கு புரிந்து கொண்ட ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் சித்தி இதானி.

சித்தி இதானியை கண்டதும் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறுகிறார் அருண் விஜய். நான் உன்னை திருமணம் செய்ய வேண்டும் என்றால் எனக்கு கோடிக் கணக்கில் பணம் வேண்டும் என்று கூறுகிறார் சித்தி இதானி. இதனால் மனம் உடைந்த காளி, ரோட்டில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது, வேகமாக வந்த விலையுயர்ந்த கார் ஒன்று காளி மீது மோத, அதில் இருந்து காளி போன்ற உருவம் கொண்ட ஒருவர் இறங்குகிறார். அவர் தான் உபேந்திரா (அருண் விஜய்).

கோடீஸ்வரராக இருக்கும் உபேந்திராவை பார்த்ததும் காளி ஷாக் ஆகிறார். இருவரும் அச்சு அசல் ஒரே உருவம் கொண்டு இருக்கின்றனர்.

இருவரும் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு நண்பர்களாகி விடுகின்றனர். இந்த செய்தியை சித்தி இதானிக்கு தெரியப்படுத்துகிறார் காளி. பணத்தாசையால், உபேந்திராவை கொன்று விடு என்று காளியிடம் சித்தி இதானி கூற, காளியும் உபேந்திராவை கொன்று விடுகிறார்.

சித்தி இதானியும் காளியும் உபேந்திராவின் வீட்டிற்குச் செல்கின்றனர். மறுநாள், உபேந்திராவிடம் பேச வீட்டிற்கு வருகிறது போலீஸ். அப்போது, அதே உருவம் கொண்ட காளி வருகிறார். தினசரி காவல் நிலையத்திற்கு வந்து கையெழுத்து இட வேண்டும் என்று கூறுகிறது போலீஸ்.

அதன்பிறகு தான் காளிக்கு தெரியவருகிறது.. உபேந்திரா பரோலில் வெளிவந்த ஒரு கொலைக் குற்றவாளி என்று. பின், யார் இந்த உபேந்திரா என்று அலசி ஆராய்கிறார் காளி. அவரைப் பற்றி காளிக்கு தெரியவர, அதிர்ச்சியில் உறைகிறார் காளி.

இறுதியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.

காளி என்ற கதாபாத்திரத்திலும் உபேந்திரா என்ற கதாபாத்திரத்திலும் மிகச் சிறப்பான ஒரு நடிப்பை கொடுத்து மிரட்டி இருக்கிறார் அருண் விஜய். வழக்கம் போல் ஆக்ஷனுக்கென்று என்று தனி மார்க்கெட் வைத்திருக்கும் அருண் விஜய், இந்த படத்திலும் ஆக்சன் காட்சிகளில் மிரட்டலான ஒரு நடிப்பை கொடுத்திருக்கிறார்.

ஒவ்வொரு சண்டை காட்சிகளிலும் தனித்துவமான ஒரு எனர்ஜியோடு நடித்து அசர வைத்திருக்கிறார். சித்தி இதானி இதுவரை ஏற்றிராத ஒரு கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருக்கிறார். கண்ணக்குழி அழகில் அனைவரையும் சொக்கி விழ வைத்திருக்கிறார்.

மேலும் தன்யா ரவிச்சந்திரன், பாலாஜி முருகதாஸ், ஹரிஷ் போராடி உள்ளிட்ட நடிகர்களும் தங்களது நடிப்பை அளவோடு கொடுத்திருக்கின்றனர். படத்தின் மிகப்பெரிய பலமே பரபரவென்று செல்லும் திரைக்கதை தான். வித்தியாசமான கதை யாரும் யோசித்திடாத வண்ணம் அடுத்தடுத்து காட்சிகள் நகர்வது படத்திற்கு மிகப் பெரும் பலமாக இருக்கிறது.

படம் முழுவதும் சண்டைக் காட்சிகள் அடுத்தடுத்து வந்து செல்வது படத்திற்கு ஒரு எனர்ஜியாக இருக்கிறது. கிளைமாக்ஸ் காட்சியில் வைக்கப்பட்ட ட்விஸ்ட் படத்தினை ஒரு படி மேலே தூக்கி நிறுத்தி இருக்கிறது. சாம் சி எஸ் இசையில் பின்னணி இசை மிரட்டலாக இருக்கிறது. காட்சியை எனர்ஜியாக பார்ப்பதற்கு பின்னணி இசை ஒரு பெரும் தூணாக வந்து நின்றது. ஒவ்வொரு காட்சியையும் மிக அழகாக செதுக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

படத்தொகுப்பும் மிகவும் ஷார்ப்பாக இருந்தது படத்திற்கு ஒரு ப்ளஸ் தான். தனக்கென்று தனித்துவமான ஒரு நடிப்பை தொடர்ந்து கொடுத்து வரும் அருண் விஜய் இந்த படத்திலும் அதை தொடர்ந்து செய்திருக்கிறார். அதிரடி ஆக்ஷன் விரும்பிகளுக்கு இந்த படம் ஒரு சரியான தீணியாக தான் இருக்கிறது.

ரெட்ட தல – ஆக்‌ஷன் அதிரடி

Facebook Comments

Related Articles

Back to top button