
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஆளுநர் திருமதி தமிழிசை செளந்தரராஜனின் தந்தையுமான குமரி ஆனந்தன் நேற்றைய தினம் காலமானார்.
இவரின் மறைவிற்கு தலைவர்கள் பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் ஆந்திரமாநில துணை முதல்வர் பவன் கல்யாண் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவித்துள்ள இரங்கல் குறிப்பில், “ தெலுங்கானா மாநில முன்னாள் ஆளுநரும் பாஜக தலைவருமான திருமதி. தமிழிசை செளந்தரராஜனின் தந்தை திரு. குமரி ஆனந்தன் காலமானார் என்பதை அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன். திரு. குமரி ஆனந்தன் அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றிய திரு. குமரி ஆனந்தன், தமிழக அரசியலில் ஒரு சிறந்த பேச்சாளராக நன்கு அறியப்பட்டவர்.
Facebook Comments





