Spotlightசினிமா

30 நாட்களில் ஒரே ஷெட்யூலாக எடுக்கயிருக்கும் படம் “பேச்சி”!

இயக்குனர் ராமச்சந்திரன் இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படம் “பேச்சி”. இப்படத்தை படக்குழு அடர்ந்த காடுகள் கொண்ட வன பகுதிகளில் படமாக்கவுள்ளது. 30 நாட்களில் ஒரே ஷெட்யூலாக வன பகுதிகளில் படக்குழுவினர் படமாக்கவுள்ளனர். இதுவரை வந்த ஹாரர் படங்களிலிருந்து இது வேறுபட்ட படைப்பாக இருக்கும்.

இப்படத்துக்காக இயக்குனர் பில்லி , சூனியம் பற்றி மிக நுணுக்கமாக அதிக நாட்கள் செலவழித்து ஆராய்ச்சி செய்து கதையை உருவாக்கியுள்ளார். இது ரசிகர்களுக்கு புதுமையான அட்வெஞ்சர் ட்ரீட்டாக இருக்கும் என்கிறார் இயக்குனர். இத்திரைப்படம் மக்களுக்கு புதுமையான அனுபவமாக இருக்கும்.

வெயிலோன் எண்டெர்டெயின்மெண்ட் சார்பாக ஆர். பரந்தாமன் , விக்னேஷ் செல்வராஜன் , விஜய் கந்தசாமி தயாரிக்கும் இப்படத்துக்கு இசை ஜஸ்டின் பிரபாகரன் , ஒளிப்பதிவு பார்த்திபன் , கலை குமார் கங்கப்பன் , படத்தொகுப்பு இக்னேஷியஸ் அஸ்வின்.

இந்த படத்தின் first look Poster-யை நடிகர் சூர்யா, விஜய் சேதுபதி, மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டனர். போஸ்டர் பலத்த வரவேற்பை பெற்றது.

Facebook Comments

Related Articles

Back to top button