ஷூட்டிங் ஸ்பாட்க்கு சரியான நேரத்திற்கு வராத சில நடிகர்கள் மத்தியில் நடிகர் பீச்சாங்கை கார்த்திக் படப்பிடிப்பு தளத்திலேயே மாரி மாரி நடித்துக் கொண்டிருக்கிறாராம்.
புதிய இயக்குனர் மிலன் இயக்கும் கமர்ச்சியல் படத்தில் அதிகாலை 6 மணிக்கு படப்பிடிப்பு ஆரம்பித்து இரவு 3 மணி வரைக்கும் படப்பிடிப்பு நடைபெற்றது , அதைத்தொடர்ந்து திருவள்ளூர் சென்று விளம்பர படம் ஓன்றில் இன்று அதிகாலை 6:30 மணிக்கு படப்பிடிப்பு தொடங்கி இரவு 7 மணிக்கு நிறைவடைகிறது. அங்கிருந்து புறப்பட்டு நேசன் மற்றும் சிம்புதேவன் போன்ற பெரிய இயக்குனருடன் உதவி இயக்குனராக பனி புரிந்த டீ.ஆர்.பாலா டுவீலர் பந்தயத்தை மையமாக வைத்து புதிய படம் ஒன்றை இயக்குகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு மறுநாள் அதிகாலை 6 மணி அளவில் தொடங்கி இரவு 8 மணிக்கு நிறைவடைகிறது. மறுபடியும் இயக்குனர் மிலன் படப்பிடிப்பு இரவு 9 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 2 மணிக்கு நிறைவடைகிறது தொடர்ந்து 60 மணி நேரம் இடைவிடாத பட பிடிப்பில் நடித்துள்ளார்..
தொடர்ந்து 60 மணி நேரம் படப்பிடிப்பு நடைபெறுகிறதே உங்களுக்கு சோர்வாக இல்லையா என்று கார்த்தியிடம் கேட்ட போது எனக்கு வேலை பார்ப்பது ரொம்ப பிடிக்கும் எனக்கு இதுவரை சோர்வாகவில்லை என்று கூறினார்
பீச்சாங்கை கார்த்திக்கை வைத்து படம் எடுத்தால் ஹீரோ ஷூட்டிங் ஸ்போட்க்கு லேட்டா வர பிரச்சனையே இருக்காது படப்பிடிப்பும் விரைவில் முடியும் தயாரிப்பாளருக்கும் எந்த வித நஷ்டமும் ஆகாது. சினிமாவில் இப்படிப்பட்ட ஹீரோ இருப்பது ஆச்சரியம்தான்.