Spotlightசினிமா

தொடர் தோல்வியில் சிக்கித் தவிக்கும் பிரபாஸுக்கு கைகொடுக்குமா ‘ஃபௌசி ..?? டிசம்பர் 3 ஆம் தேதி வெளியாகிறது !

நடிகர் ‘ பிரபாஸ் நடிப்பில் இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் டி சீரிஸ் நிறுவனங்கள் இணைந்து வழங்கும் திரைப்படமான ‘ஃபௌஜி’ திரைப்படம்டிசம்பர் மாதம் மூன்றாம் தேதி முதல் உலகம் முழுவதும் வெளியாகிறது. இப்படத்தின் வெளியீட்டு தேதியை அறிவிக்கும் வகையில் போஸ்டர் வெளியிட்டுள்ளது படக்குழு.

ஃபௌசி படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக இமான்வி நடிக்கிறார். இவர்களுடன் அனுபம் கெர், மிதுன் சக்கரவர்த்தி, ஜெயப்பிரதா, பானு சந்தர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

இந்த திரைப்படத்திற்கு சுதீப் சட்டர்ஜி ஒளிப்பதிவு செய்ய விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார். தயாரிப்பு வடிவமைப்பை அனில் விலாஸ் ஜாதவ் மேற்கொள்ள படத்தொகுப்பு பணிகளை கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ்  கையாள்கிறார்.

நடிகர்கள்:  பிரபாஸ், இமான்வி, மிதுன் சக்கரவர்த்தி, அனுபம் கெர், ஜெயப்பிரதா ,பானுச்சந்தர் மற்றும் பலர்.

தொழில்நுட்பக் குழு :

எழுத்து & இயக்கம் : ஹனு ராகவபுடி
தயாரிப்பு நிறுவனம் : மைத்ரி மூவி மேக்கர்ஸ்
வழங்குபவர்கள் : குல்சன் குமார் – பூஷன் குமார் – டி சீரிஸ் பிலிம்ஸ்
தயாரிப்பாளர்கள் : நவீன் யெர்னேனி- ஒய் ரவிசங்கர் – பூஷன் குமார்
ஒளிப்பதிவு : சுதீப் சட்டர்ஜி
இசை : விஷால் சந்திரசேகர்
தயாரிப்பு வடிவமைப்பு :அனில் விலாஸ் ஜாதவ்
படத்தொகுப்பு : கோத்தகிரி வெங்கடேஸ்வரராவ்
வி எஃப் எக்ஸ்- VFX-  ஆர். சி
கமலா கண்ணன்
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெட்டிங் : ஃபர்ஸ்ட் ஷோ

பாகுபலி படத்திற்குப் பிறகு, சாஹோ, ராதே ஷ்யாம், ஆதி ப்ருஷ், தி ராஜா சாப் உள்ளீட்ட பல படங்கள் தொடர்ச்சியாக பிரபாஸுக்கு தோல்வியை தந்து கொண்டிருக்கும் இந்த வேளையில், ஃபெளசியாவது கைகொடுக்குமா என்று அவரது ரசிகர்கள் வழக்கம் போல் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

*

Facebook Comments

Related Articles

Back to top button