
மிஷ்கின் இயக்க உதயநிதிஸ்டாலின் நடிக்க ஜனவரி 24ஆம் தேதி அன்று வெளியாக இருக்கிறது ‘சைக்கோ’.
இப்படத்தை டபுள் மீனிங் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் அருண்மொழி மாணிக்கம் தயாரித்திருக்கிறார். படத்தின் இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், மிஷ்கினை நினைத்து தினமும் தலையில் கைவைத்து அடித்துக் கொண்டு இருக்கிறாராம் தயாரிப்பாளர்.
ஏன் தெரியுமா..?? தமிழ் சினிமாவின் முன்னனி தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் குடும்பத்து வாரிசு மைத்ரேயாவை ஹீரோவாக வைத்து படம் இயக்குகிறேன் என்று கூறி அவரது தந்தை ரகுநந்தனை தயாரிப்பாளராக்கி இயக்குனராக ஒரு கோடி அட்வான்ஸாகவும் பெற்றிருக்கிறார் நமது இயக்குனர் மிஷ்கின்.
இந்நிலையில், டபுள் மீனிங் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்திற்கு உதயநிதியை வைத்து ’சைக்கோ’ கதையை இயக்குகிறார் மிஷ்கின். இதே, சைக்கோ கதையைதான் ரகுநந்தனிடமும் கூறி அட்வான்ஸ் தொகையை வாங்கியிருக்கிறார் என்பது தான் இதில் கூடுதல் விஷயமாக வருகிறது.
ரகுநந்தன் நீதிமன்றம் செல்ல, அட்வான்ஸாக வாங்கிய ஒரு கோடியை திருப்பி கொடுக்குமாறு மிஷ்கினுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிடுகிறது. அதுவரை சைக்கோ படப்பிடிப்பு நடத்தக்கூடாது எனவும் உத்தரவு பிறப்பித்தது நீதிமன்றம்.
அதன்பிறகு ரகுநந்தனிடம் சமரசம் பேசப்பட்டு, அக்டோபர் மாதம் 50 லட்சம், நவம்பர், டிசம்பர் மாதங்களில் தலா 25 லட்சம் என்று தந்து விடுவதாகக் கூறியிருக்கிறார் மிஷ்கின்.
ஆனால் நடந்தது என்னவோ, மீண்டும் பணம் கொடுக்காமல் டிமிக்கி கொடுத்திருக்கிறார் மிஷ்கின். மீண்டும் கோர்ட், மீண்டும் படப்பிடிப்பு நிறுத்தம். அதன் பிறகு அவசரகதியாக மிஷ்கின் 50 லட்சத்துக்கு செக் கொடுத்திருக்கிறார்.
அதன்பிறகு வரவேண்டிய ரூபாய் 50 லட்சம் தராமல் இழுத்தடித்துக் கொண்டு சென்றிருக்கிறார் மிஷ்கின். மீண்டும் நீதிமன்றம் சென்றிருக்கிறார் ரகுநந்தன்.
அப்செட் ஆன டபுள் மீனிங் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பு தரப்பு, எங்கள் படப்பிடிப்பு தான் இதனால் பாதிக்கப்படுகிறது என்று கதறியிருக்கிறது. அப்படியென்றால், மிஷ்கினுக்கு சம்பளத்தில் பாக்கி இருந்தால் அதைப் பிடித்து கோர்ட்டில் கட்டச் சொல்லி உத்தரவு வந்திருக்கிறதாம்.
இதனால், கடுப்பாகி போன டபுள் மீனிங் ப்ரொடக்ஷன்ஸ் தரப்பு தலையில் அடித்துக் கொண்டு அப்செட்டில் இருக்கிறாரார்களாம்.