Spotlightசினிமா

குடும்பங்கள் கொண்டாடும் ‘தர்பார்’… மூன்றாவது நாளிலும் வசூல் மழை!

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வியாழன் அன்று வெளியான படம் ‘தர்பார்’.

லைகா நிறுவனம் இப்படத்தை மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்திருந்தது.

நயன்தாரா, சுனில் ஷெட்டி, யோகி பாபு, நிவேதா தாமஸ் உள்ளிட்ட பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர்.

அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

வியாழன் அன்று வெளியான இப்படம், அனைத்து தரப்பு ரசிகர்களாலும் வெகுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டு ஹவுஸ் புல் காட்சிகளாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.

உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான திரையரங்குகளில் வெளியான இப்படம், மூன்றாவது நாளான இன்றும் குடும்பம் குடும்பமாக வந்து படத்தை கொண்டாடி வருகின்றனர்.

பொங்கல் விடுமுறை தினங்கள் இருப்பதால், வசூலில் இன்னும் சாதனைகள் படைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் நாளிலே சுமார் 117 கோடியை இப்படம் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
error: Content is protected !!
Close
Close