
தாதா 87 படத்தினை இயக்கிய விஜய்ஸ்ரீ ஜி தனது அடுத்த படமாக பொல்லாத உலகில் பயங்கர கேம் (பப்ஜி) என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்தில் ஐஸ்வர்யா தத்தா, மொட்டை ராஜேந்திரன், மைம் கோபி, அனிற்றா, சாந்தினி, அர்ஜுமன் (விக்ரமின் தங்கை மகன்), ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.
படம் தற்போது இறுதிகட்ட பணிகளில் உள்ளது. படத்தின் இரு பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
அவ்வப்போது வெளிவரும் படத்தின் போஸ்டர்களால் விநியோகஸ்தரர்கள் தரப்பிடம் பெரும் எதிர்பார்ப்பை எட்டியுள்ளது. அதுமட்டுமல்லாது, மக்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது இப்படம்.
இந்நிலையில், கொரோனா ஊரடங்கு முடிந்தும், மக்கள் திரையரங்குகளை இன்னும் சரிவர நாடாத நிலையில் பல படங்கள் இன்னமும் வெளிவராமல் இருந்து வருகின்றது.
படத்தை திரையரங்குகளில் ரிலீஸ் செய்வதா அல்லது ஓடிடி’யில் ரிலீஸ் செய்வதா என படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
படம் எங்கு வெளியானாலும், அது மக்களிடம் சரியான முறையில் சென்றடைய வேண்டும். இதுவே எங்கள் நோக்கம் என படக்குழு தெரிவித்துள்ளது.