
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘தர்பார்’.
இப்படத்தின் பிரீமியர் காட்சியை பிரைம் மீடியா, கல் ராமன் மற்றும் ஜி2 ஜி1 இண்டர்நேஷனல் ஆகியோருடன் இணைந்து, வருகின்ற ஜனவரி 08ம் தேதி அமெரிக்காவில் வெளியிடுகிறது.
தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் அமெரிக்காவில் மட்டும் சுமார் 300க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியாக உள்ளதாம்.
தர்பார் படத்தில் ரஜினியுடன் இணைந்து சுனில் ஷெட்டி, நயன்தாரா, யோகி பாபு, தம்பி ராமையா, நிவேதா தாமஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
தர்பார் திரைப்படம் இந்தியாவில் ஜனவரி 9ம் தேதி ரிலீசாகவுள்ளது.
Rajinis Darbar Movie Premier Show on 8th January 2020
Facebook Comments