Spotlightசினிமா

‘எல் கே ஜி’யில் அரசியலை துவங்கிய ஆர் ஜே பாலாஜி!

தன்னுடைய நேர்மையான, அதிரடியான கருத்துக்கள் மூலமாகவும், சமூக சிந்தனைகள் நிறைந்த செயல்களாலும் குறுகிய காலத்தில் இளைஞர்கள் இடையே பெரும் பெயரும் புகழும் பெற்ற ஆர் ஜே பாலாஜி தற்போது “எல் கே ஜி” என்ற அரசியல் நையாண்டி படத்தை இயக்கி, நடிக்க உள்ளார்.
ஜாதி, மதம், பாலினம் என்று எல்லா வேற்றுமைகளை கடந்து இவரிடம் பெருகி வரும் இளைஞர் வட்டாரம் இந்த புதிய படத்தின் அறிவிப்பை சமூக வலை தளங்களில் சிறப்பாக வரவேற்றனர்.

வேல் productions சார்பில் டாக்டர் கே கணேஷ் தயாரிக்கும் இந்த படத்தில் பிரியா ஆனந்த் கதாநாயகியாக நடிக்கிறார். பிரபல அரசியல்வாதியும், இலக்கியவாதியுமான நாஞ்சில் சம்பத் இந்த படத்தில் நடிகராக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
“இன்றைய இளைஞர்கள் வாழ்வில் அரசியல் என்பது இன்றி அமையாதது ஆகும்.

நிமிடத்துக்கு நிமிடம் “பிரேக்கிங் நியூஸ்” என்னும் கால கட்டத்தில் வாழ்ந்து வரும் இன்றைய இளைஞர்களுக்கு, அரசியல் பின்னணியை பற்றியும், அரசியல்வாதிகளின் பின் புலத்தையும் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் அதிகம் இருக்கும். அவர்களுக்கான படம் தான் “எல் கே ஜி”. நாஞ்சில் சம்பத் சார் இந்தப் படத்தில் எனக்கு அப்பாவாக நடிக்கிறார். பல்வேறு காலகட்டங்களில் மக்களை மகிழ்விக்கும் பொறுப்பை மேற்கொண்ட அவருக்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அதிகம்.அவர்களும் அவருடைய கதாபாத்திரத்தை கொண்டாடுவார்கள்.

ப்ரியா ஆனந்த் கதாநாயகியாக நடிக்கிறார்.எனது நீண்ட நாள் தோழியான இவர் ஒரு கதாநாயகி என்பதையும் தாண்டி தந்த பங்களிப்பு பாராட்டுதலுக்கு உரியது.லியோன் ஜேம்ஸ் இசை அமைக்க, “மேயாத மான்” படத்தின் ஒளிப்பதிவாளர் விது ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி ஒளிப்பதிவு செய்கிறார். திரைக்கதைக்கு அப்பால் வெளியே நடக்கும் அரசியல் விந்தைகளையும் தாண்டி இந்த படம் எல்லா தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும்” என நம்பிக்கையுடன் தெரிவித்தார் ஆர் ஜெ பாலாஜி.

Facebook Comments

Related Articles

Back to top button