Spotlightசினிமா

கிரீடம் சூடப்போகும் திரைக்கதை மன்னன்! கூடாரம் காலி செய்யும் ஆர் கே செல்வமணி!!

மிழ்நாடு திரைபப்ட இயக்குனர்கள் சங்கத்தின் நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிவடைவதால், நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்தச் சங்கத்தின் 101-வது பொதுக் குழுக் கூட்டத்தில் இதற்கான முடிவும் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி 1 தலைவர், 2 துணைத் தலைவர்கள், 1 பொதுச் செயலாளர், 4 இணைச் செயலாளர்கள், 1 பொருளாளர், 12 செயற்குழு உறுப்பினர்கள் என்ற நிர்வாகக் கமிட்டிக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்தத் தேர்தலுக்கான விண்ணப்பங்கள் வரும் ஜனவரி 5, 6 ஆகிய தேதிகளில் சங்க அலுவலகத்தில் தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜனவரி 7, 8, 9 ஆகிய மூன்று தினங்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள்ளாக சமர்ப்பிக்கப்பட்டாக வேண்டும்.

விண்ணப்பங்கள் பரிசீலனை – ஜனவரி 10.

விண்ணப்பங்களை திரும்பப் பெற கடைசி தேதி – ஜனவரி 11.

இறுதி வேட்பாளர் பட்டியல் ஜனவரி 12-ம் தேதியன்று வெளியிடப்படும்.

தேர்தல் வரும் ஜனவரி 23 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 7 மணி முதல் மாலை 4 மணிவரையில் வடபழனியில் உள்ள இசைக் கலைஞர்கள் சங்கத்தில் நடைபெறும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, இச்சங்கத்தின் தலைவராக ஆர் கே செல்வமணி இருந்து வருகிறார். ஆர் கே செல்வமணி பெப்சி-யிலும் தலைவராக இருக்கிறார்.

இரு சங்கத்திலும் தலைவராக இருந்தாலும், பெப்சியில் காட்டும் நிர்வாகத் திறமையை இயக்குனர் சங்கத்தில் காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டு ஆர் கே செல்வமணி மீது நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.

இந்நிலையில், ஆர் கே செல்வமணியை எதிர்த்து கே பாக்யராஜ் போட்டியிடபோவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தேர்தலில் நீங்கள் தலைவர் பதவிக்கு கட்டாயம் போட்டியிட வேண்டும் என்று சீனியர் இயக்குனர்கள் பலர் பாக்யராஜை தொடர்பு கொண்டு கேட்டுக் கொண்டு வருகிறார்களாம்.

எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவராக இருந்து வரும் பாக்யராஜ், அங்கு சிறப்பான நிர்வாக திறமையை காட்டி வருகிறார். மேலும், புதுமுக எழுத்தளார்களுக்கு தொடர்ந்து ஆதரவாகவும், பெரும் தூணாகவும் இருந்து வருகிறார்.

எழுத்தாளர் சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கும் பலர், இயக்குனர் சங்கத்திலும் உறுப்பினர்களாக உள்ளனர். இதனால், எழுத்தாளர் சங்கத்தில் இருக்கும் அதே ஆதரவு, இயக்குனர்கள் சங்கத்திலும் பாக்யராஜ் அவர்களுக்கு கிடைக்கும் என சீனியர் இயக்குனர்கள் கூறி வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல், இயக்குனர் பாக்யராஜ் ஆளுங்கட்சியான திமுக-வுடன் நெருங்கிய நட்புடன் பழகி வருகிறார். இயக்குனர்கள் சங்கத்திற்கு பல உதவிகளை அரசு மூலமாக பெற இது சற்று பலமாகவும் இருக்கும் எனவும் கருதுகின்றனர் சீனியர்கள்.

இளைஞர்களுடன் சேர்ந்து சீனியர்களும் இயக்குனர் பாக்யராஜ் அவர்களுக்கு பக்க பலமாக இருப்பதால், இந்த இயக்குனர்கள் சங்க தேர்தலில் பாக்யராஜ் கிரீடம் சூடப்போவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button