Spotlightசினிமா

8 லட்சம் பார்வைகளை கடந்த ”ராபர்” பட ட்ரெய்லர்… குவியும் பாசிடிவ் கமெண்ட்ஸ்!

சென்னையில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தின் பின்னணியில் உருவாகி இருக்கும் படம் ‘ராபர்’. இப்படத்திற்கு ‘மெட்ரோ ‘திரைப்படத்தின் இயக்குநரான ஆனந்த கிருஷ்ணன் கதை, திரைக்கதை எழுதியுள்ளார்.

எஸ். எம்.பாண்டி இயக்கி உள்ளார். இம்ப்ரஸ் ஃபிலிம்ஸ் சார்பில் பத்திரிகையாளர் கவிதா எஸ் தயாரித்துள்ளார். தயாரிப்பில் அவருடன் மெட்ரோ ப்ரொடக்ஷன்ஸ் ஆனந்த கிருஷ்ணனும் இணைந்துள்ளார்.

படத்தின் ட்ரெய்லரானது நான்கு நாட்கள் முன்பு சரிகம தமிழ் யூ டியூப் தளத்தில் வெளியானது. வெளியானது முதலே இணையத்தில் ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது.

யூ டியூப் தளத்தில் மட்டும் இதுவரை சுமார் 8 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது. மேலும், சினிமா ரசிகர்கள் பலர் பாசிடிவாகவும் இந்த ட்ரெய்லருக்கு கமெண்ட்ஸ் தெரிவித்து வருகின்றனர்.

இதனால், இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. படத்தினை வரும் மார்ச் மாதம் 14 ஆம் தேதி திரைக்குக் கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது.

இப்படத்தின் நாயகனாக சத்யா நடித்துள்ளார். மேலும், தீபா சங்கர், ஜெயபிரகாஷ், சென்ராயன், டேனி போப் மற்றும் பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு என்.எஸ்.உதயகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜோகன் சிவனேஷ் இசை அமைத்துள்ளார்.

படத்தொகுப்பு ஸ்ரீகாந்த் NB, கலை PPS விஜய் சரவணன், நடனம் ஹரி கிருஷ்ணன்.

இப்படத்தினை பிரபல நிறுவனமான சக்தி பிலிம் பேக்டரி தமிழகமெங்கும் வெளியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Facebook Comments

Related Articles

Back to top button