Spotlightசினிமா

ரசிகர்களா..?? குண்டர்களா..??? – ரோபோ ஷங்கரின் அட்ராசிட்டி!

மிழ் சினிமாவில் அடிமட்டத்தில் இருந்து கடின உழைப்பால், நல்ல குணத்தால் உச்சம் பெற்ற நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என பலர் இருக்கின்றனர்.

தலைக்கணத்தில் இருந்தவர்களை இந்த சினிமா தூக்கி எறியவும் தயங்கியதில்லை.

சரி நம்ம விஷயத்துக்கு வருவோம்….

சமீபத்தில், போஸ் வெங்கட் இயக்கத்தில் கன்னி மாடம் என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இவ்விழாவில், விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி, விக்ரமன், பரத், லியோனி என பலர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில், காமெடி நடிகர் ரோபோ ஷங்கரும் கலந்து கொண்டார். விழாவில், ரோபோ ஷங்கரின் ரசிகர்கள் என சிலர் ‘ரோபோ ஷங்கரின் உருவம் பதித்த பேட்ஜ்ஜை’ அணிந்து கொண்டு கலந்து கொண்டனர்.

அவர்கள் தங்களை குண்டர்களை போல் காட்டிக் கொண்டனர். விழாவிற்கு வந்தவர்கள் பலரை குண்டர்கள் த்ள்ளி தள்ளி விட்டது, பத்திரிகையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அவர்களின் செயல்கள், பலரையும் முகம் சுழிக்க வைக்கும்படியாக இருந்தது. தற்போதைய தமிழ் சினிமாவில் எளிமையின் மறுஉருவம் என்றால் அது விஜய் சேதுபதி தான் என்று பலர் கூறுவார்கள். அவரை மேடைக்கு அழைத்து வருவதற்கே அந்த குண்டர்கள் விடுத்த சத்தம் பலரையும் எரிச்சலடைய வைத்தது.

இன்று சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தோடு பல ஆண்டுகள் தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத சக்தியாக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். அவரது இந்த உயரத்திற்கும் வளர்ச்சிக்கும் காரணம் அவரது எளிமை தான்… ஏதோ சொல்லனும்னு தோனுச்சு..

Facebook Comments

Related Articles

Back to top button