
ரஜினியின் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பொங்கலுக்கு வெளிவர இருக்கிறது ‘பேட்ட’.
இப்படத்தினை தொடர்ந்து ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இவரைத் தொடர்ந்து கே எஸ் ரவிக்குமார், சுரேஷ் கிருஷ்ணா ஆகியோர் படத்திலும் ரஜினி நடிக்க திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த சட்டமன்ற தேர்தலில் ரஜினி போட்டியிடுவார் என்பதால், அதற்கு முன்பாக இத்தனை படங்களையும் விரைந்து படத்தினை முடிக்க திட்டமிட்டுள்ளாராம் ரஜினி.
இதனைத் தொடர்ந்து பாகுபலியை இயக்கிய எஸ் எஸ் ராஜமெளலி இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கிறாராம். இப்படத்தை மிக பிரம்மாண்டமாக எடுக்கவும் முடிவெடுத்துள்ளாராம் ரஜினி.
அதுதான் சினிமா உலகில் ரஜினி நடிக்கும் கடைசி படமாக இருக்கும் என்கிறார்கள்.
Facebook Comments



