Spotlightசினிமா

படத்திற்காக படுக்கைக்கு அழைக்கப்பட்ட ஹீரோயின்… அடுத்து நடந்தது என்ன தெரியுமா.?

டத்தில் நடிக்க வேண்டும் படுக்கைக்கும் செல்ல வேண்டும் என்று பல நடிகைகள் கூறி கேள்விபட்டிருக்கிறோம். இதனால் சினிமா பக்கம் வராமல் ஓடிச் சென்றவர்கள் பலர். அப்படி ஒரு சம்பவம் திருவனந்தபுரத்தில் அரங்கேறியுள்ளது. ஆனால், இந்த நடிகை ஓடிப் போகாமல் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

இந்நிலையில் பிரபல மலையாள நடிகை சஜிதா மாடத்தில் தமிழ் படத்தில் நடிக்க தான் படுக்கைக்கு அழைக்கப்பட்டதாக கூறுகிறார் சஜிதா.

உதவி இயக்குநர் கார்த்திக் என்பவர் சஜிதாவுக்கு போன் செய்து படம் ஒன்றில் குணச்சித்திர வேடத்தில் நடிக்க முடியுமா என்று கேட்டுள்ளார்.

அவரை பற்றிய விபரங்களை கேட்டறிந்துள்ளார் கார்த்திக். இதையடுத்து சஜிதா படம் தொடர்பாக இமெயில் அனுப்புமாறு கோரிக்கை விடுத்துள்ளார்

பிற திரையுலகில் இருந்து வாய்ப்புகள் வந்தால் அவை உண்மையா என்பதை உறுதி செய்ய சஜிதா இமெயில் அனுப்பச் சொல்வது வழக்கமாம். அவர் இமெயில் அனுப்புமாறு கூறியதும் அட்ஜஸ்ட் பண்ண தயாரா என்று கார்த்திக் கேட்டுள்ளார். இதை கேட்டு சஜிதா அதிர்ச்சி அடைந்துள்ளார்.

என் வாழ்நாளில் யாரும் என்னை பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தது இல்லை. நடிகைகளை மட்டும் தான் அட்ஜஸ்ட் பண்ண சொல்வீர்களா இல்லை நடிகர்களையுமா என்று நான் கார்த்திக்கிடம் கேட்டேன் என்கிறார் சஜிதா. படத்தின் பெயர் சரியாக நினைவில் இல்லை என்று சஜிதா கூறியுள்ளார்.

கார்த்திக்கிற்கு ஒரு பாடம் கற்பிக்க விரும்பிய சஜிதா அட்ஜஸ்ட் பண்ண தயாராக உள்ளவர்கள் இந்த உதவி இயக்குநரை அணுகலாம் என்று கூறி அவரின் செல்போன் எண்ணை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஆனால் கார்த்திக்கின் செல்போன் தொடர்ந்து சுவிட்ச் ஆஃபில் உள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button