Spotlightசினிமாவிமர்சனங்கள்

சலார் விமர்சனம் 3.5/5

பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், ப்ரித்வி ராஜ், ஸ்ருதி ஹாசன், ஜெகபதி பாபு, பாபி சிம்ஹா, ஈஸ்வரி ராவ், ஸ்ரேயா ரெட்டி, ஜான் விஜய், மைம் கோபி உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் சலார்.

வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு தனது தந்தைக்கு தெரியாமல் வருகிறார் ஸ்ருதி ஹாசன்.

அவர் வருவதை அறிந்த சிலர், அவரை கடத்த திட்டமிடுகின்றனர். இந்தியாவில், மைம் கோபியை ஸ்ருதிஹாசனை மீட்டு, பிரபாஸிடம் கொண்டு ஒப்படைக்கிறார். அங்கு வரும் கும்பல், ஸ்ருதிஹாசனை இழுத்துச் செல்கிறது.

இதனை பார்த்த ஈஸ்வரி ராவ், தனது மகனான பிரபாஸிடம் ஸ்ருதிஹாசனை காப்பாற்ற சொல்கிறார். அங்கு வந்த ரெளடிகள் அனைவரையும் அடித்து துவம்சம் செய்கிறார்.

அதுவரை எந்தவொரு அடிதடிக்கும் போகாமல் இருந்த பிரபாஸ், தனது தாய் கூறியதும் புலியாக மாறிவிடுகிறார்.

எதற்காக அவர் அதுவரை அமைதியாக இருந்தார்.? அவர் வாழ்வில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.

தனது முந்தைய படம் மாதிரியே ஒரு மாஸ் ஆக்‌ஷன் கலந்த கலவையாக இப்படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் பிரசாந்த் நீல்.

மாஸ் ஆக்‌ஷன் கலந்த படமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் பிரசாந்த் நீல். இந்தியாவை ஒட்டி ஒரு நாட்டையே உருவாக்கி, அதற்கான சட்டதிட்டம் என்று கனவிலும் நினைத்து பார்க்க முடியாத ஒரு உலகத்திற்கு அனைவரையும் அழைத்துச் சென்றிருக்கிறார் இயக்குனர்.

ஆக்‌ஷனில் அதகளம் செய்திருக்கிறார் பிரபாஸ். ரொம்ப ரொம்ப பில்-டப் காட்சிகள் படத்திற்கு ஆங்காங்கே சரிவை ஏற்படுத்தி விடுகிறது. ஆனாலும், ரசிகர்களுக்கு அது நிச்சமயமாக விருந்தாக தான் இருக்கும்.

பிரபாஸுக்கு இணையாக பிருத்விராஜும் ஆக்‌ஷனில் இறங்கி அடித்திருக்கிறார். பின்னணி இசை மிரட்ட வைத்திருக்கிறது.

ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரும் பலம்.

சலார் – ஆக்‌ஷன் உலகம்…

Facebook Comments

Related Articles

Back to top button