Spotlightசினிமா

விஜய் யேசுதாஸ் நடிக்கும் ‘சல்மான்’.. 7 மொழிகளில் பிரம்மாண்ட வெளியிடு!

டால்ஸ் மற்றும் கட்டுமக்கான் படங்களை இயக்கிய ஷலில் கல்லூர் இயக்கும் படம் சல்மான். 3டி படமாக உருவாகியுள்ள இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடா, மராத்தி, பெங்காலி, இந்தி உள்ளிட்ட ஏழு மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய் யேசுதாஸ், ஜொனிடா ஆகியோர் ஜோடியாக நடித்துள்ளனர். தமிழில் வர்தா என்ற பெயரில் வெளியாகிறது.

ஷஜு தாமஸ், ஜோஸ், ஜோய்ஸ் ஆகியோர் இணைந்து இப்படத்தை ரூ15 கோடியில் பிரமாண்டமாக தயாரித்துள்ளனர். இப்படம் ரொமான்டிக் சஸ்பென்ஸ் த்ரில்லராக எடுக்கப்பட்டுள்ளது. கேரளா, துபாய், மலேசியா, ராமோஜி பிலிம்சிட்டி உள்ளிட்ட இடங்களில் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது.

சர்பரரோஸ் தனது மனைவி சமீரா மற்றும் மகள் சீசன் ஆகியோருடன் துபாயில் வசித்து வருகிறார். விடுமுறைக்காக சொந்த ஊர் வருகிறார்கள். இந்த திரைக்கதையில் பார்வையாளர்கள் நாற்காலியில் நுனியில் அமர்ந்து பார்க்கும் அளவிற்கு கதையை எடுத்துள்ளார் இயக்குனர். தன்னைபற்றிய ரகசியத்தை சொல்ல துடிக்கும் ஒருவனின் கதை ஆகும்.

சால்மன் என்பது ஒருவகை கடல் மீன். பிறக்கும்போதே அநாதையான இந்த மீன் அனைத்து தடைகளையும் சூழல்களையும் தாண்டி கண்டம் விட்டு கண்டம் கடலியேயே பயணிக்கிறது அதுபோலவே இப்படத்தின் கதை வாழ்வின் கறுப்பு பக்கங்களை எவ்வாறு எதிர்கொள்கிறது என்பதை இப்படம் பேசுவதால் இப்படத்திற்கு சால்மன் என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் இப்படத்தை பிவீஆர் சினிமாஸ் வெளியிடுகிறது.

இப்பாடலை சித் ஶ்ரீராம் பாடியுள்ளார். நவீன் கண்ணன் கம்போஸ் செய்துள்ள படத்திற்கு ஶ்ரீஜித் இசை அமைத்துள்ளார். ஒளிப்பதிவாளர்கள் ராகுல் மற்றும் செல்வனின் அருமையாக கைவண்ணத்தில் இப்பாடல் லண்டனில் எடுக்கப்பட்டுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button