
நடிகை சமந்தாவின் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமான ‘யசோதா’ ஹரி- ஹரிஷ் இயக்கத்தில் இந்த வருடம் நவம்பர் மாதம் 11ம் தேதி வெளியாக இருக்கிறது. ஸ்ரீதேவி மூவிஸ் பேனரின் கீழ் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.
இப்படத்தின் சண்டைப் பயிற்சியாளர் யானிக் பென், அதிதீவிரமான சண்டைக் காட்சிகளில் சமந்தா நடித்துள்ளது குறித்து பகிர்ந்துள்ளார்.
சமந்தாவின் தீவிரமான அர்ப்பணிப்பும் ஆர்வமும் மட்டுமே இந்த சண்டைக் காட்சிகளை அடுத்த நிலைக்கு எடுத்து சென்று பார்வையாளர்களுக்கு பரபரப்பூட்டுவதாக மாற்றியுள்ளது எனவும் கூறியுள்ளார்.
இதற்கு முன்பு யானிக் பென் சமந்தாவுடன் ‘தி ஃபேமிலி மேன்2’ வெப் சீரிஸில் இணைந்து பணியாற்றினார். தற்போது சிறந்த ஆக்ஷன் காட்சிகளுக்காக மீண்டும் ‘யசோதா’ படத்தில் ஒன்றிணைந்துள்ளனர்.
Facebook Comments