Spotlightசினிமா

சச்சின் – அபர்நிதி நடிக்கும் ‘டீமன்’

சஸ்பென்ஸ் – த்ரில்லருடன் ஹாரர் எலிமெண்ட்ஸூம் சேர்ந்து உருவாகி இருக்கும் ‘Demon’ படத்தின் முதல் பார்வையை நடிகர் விஜய்சேதுபதி & இயக்குநர் மிஷ்கின் வெளியிட்டுள்ளனர். தேசியவிருது வென்ற இயக்குநர் வசந்தபாலன் வழங்க, விண்டோ பாய்ஸ் பிக்சர்ஸின் ஆர். சோமசுந்தரம் படத்தைத் தயாரித்து இருக்கிறார்.

‘அங்காடித்தெரு’, ‘அரவான்’, ‘காவிய தலைவன்’, ‘ஜெயில்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘காஷ்மோரா’ போன்ற படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ரமேஷ் பழனிவேல், ‘Demon’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இயக்கம் மட்டுமின்றி இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார்.

மோகன்லாலின் தேசியவிருது பெற்றத் திரைப்படமான ‘மரைக்காயர்’ படத்தில் தனது அற்புதமான இசைக்காக பாராட்டுகளைப் பெற்ற ரோனி ரஃபேல், இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். கார்த்திக் நேத்தா பாடல் வரிகளை எழுதுகிறார். ஆர்.எஸ். ஆனந்த குமார் (பிரபுதேவாவின் ‘குலேபாகவலி’ & ஜோதிகாவின் ‘ஜாக்பாட்’ புகழ்) இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்தப் படத்தின் கதை நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது. ஹாரர்- சஸ்பென்ஸ்- த்ரில்லர் ஜானரில் உருவாகி இருக்கக்கூடிய இந்தப் படம் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கும் பிடித்த வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. பீட்சா, ராட்சசன், பிசாசு மற்றும் பல படங்கள் இந்த ஜானரில் வெளியாகி வெற்றிப் பெற்றதற்கு உதாரணங்களாக இருக்கிறது. ‘Demon’ திரைப்படம் இவை அனைத்தையும் உள்ளடக்கி, உணர்ச்சிகரமான கதையுடன் வழங்கப்பட்டுள்ளது.

சச்சின் இந்தப் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அபர்நதி இதில் கதாநாயகியாக நடிக்கிறார். ஆ

கும்கி அஸ்வின், இன்ஸ்டாகிராம் சென்சேஷன் ரவீனா தாஹா, பிக் பாஸ் புகழ் ஸ்ருதி பெரியசாமி, மிப்புசாமி, பிரபாகரன், அபிஷேக், தரணி, நவ்யா சுஜி, சலீமா மற்றும் பலர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்தின் தொழில்நுட்பக்குழு விவரம்:

எழுதி இயக்கியவர்: ரமேஷ் பழனிவேல்,
தயாரிப்பு: ஆர்.சோமசுந்தரம்,
இசை: ரோனி ரஃபேல்,
ஒளிப்பதிவு: ஆர்.எஸ். ஆனந்த குமார் எம்.எஃப்.ஐ,
படத்தொகுப்பு: ரவிக்குமார். எம்,
கலை: விஜய் ராஜன்,
பாடலாசிரியர்: கார்த்திக் நேதா,
தயாரிப்பு நிர்வாகி: குமார் வீரப்பசாமி,
சண்டைக்காட்சிகள்: ராக் பிரபு,
ஆடை: கடலூர் எம்.ரமேஷ்,
ஒலிக்கலவை: ஹரிஷ்,
ஒலி வடிவமைப்பு: ராஜு ஆல்பர்ட்,
VFX & DI: Accel Media,
வண்ணம்: ஜி.எஸ்.முத்து,
தயாரிப்பு அமைப்பாளர்: வி.பாலகிருஷ்ணன்,
படங்கள்: முத்து வேல்,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா-ரேகா டி’ஒன்,
விளம்பர வடிவமைப்பு: யுவராஜ் கணேசன்

Facebook Comments

Related Articles

Back to top button