
சில தினங்களுக்கு முன் சந்தானம் நடிப்பில் உருவாகி வெளிவந்த ‘ஏ1’ மிகப்பெரும் வெற்றிபெற்றதை அடுத்து, மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார்.
இப்படத்தினைத் தொடர்ந்து அவர் நடித்து வரும் அடுத்த படம் ‘டகால்டி’. இப்படத்தில் சந்தானத்தோடு யோகி பாபுவும் நடித்து வருகிறார்.
இப்படத்தினை 18 ரீல்ஸ் நிறுவனம் சார்பில் எஸ் பி செளத்ரி தயாரித்து வருகிறார். ஏ1 படத்தின் வெற்றியை பார்த்து சந்தானத்தில் அடுத்தப் படமான ‘தில்லுக்கு துட்டு 3’ படத்தினையும் எஸ் பி செளத்ரியே தயாரிக்க ஒப்புக் கொண்டுள்ளாராம்.
தில்லுக்கு துட்டு 3 படத்தினை 3டி தொழில்நுட்பத்தில் சற்று அதிக பொருட் செலவில் தயாரிக்கவிருக்கிறார் எஸ் பி செளத்ரி…
Facebook Comments