
தீபாவளி என்றாலே புது திரைப்படங்களின் ரிலீஸ் மக்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டத்தைக் கொடுக்கும். அதற்காகவே முன்னணி ஹீரோக்களின் படங்களை பண்டிகை காலங்களில் வெளியிடுவது தமிழ் சினிமாவின் எழுதப்படாத வழக்கமாகிவிட்டது.
அந்த வகையில், இந்த வருட தீபாவளி பண்டிகைக்கு விஜய்யின் ‘சர்கார்’ படம் வெளியாவதால், ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் இருக்கிறார்கள். படத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்டு அநேக ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கொண்டாட்டத்தில் இருக்கும் விஜய் ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, தீபாவளிக்கு விஜய்க்கு போட்டியாக ரஜினியையும் களம் இறக்க உள்ளார்கள்.
ஆம், ’சர்கார்’ வெளியாகும் இந்த வருட தீபாவளியன்று பிரபல தொலைக்காட்சியில் ரஜினிகாந்தின் ‘காலா’ படத்தை ஒளிபரப்ப இருக்கிறார்களாம். டி.ஆர்.பி ரேட்டிங்கிற்காக அந்த தொலைக்காட்சி இதனை செய்தாலும், தியேட்டரில் விஜய் படம் வெளியாக, டிவி-யில் இப்படி ஒரு படத்தை ஒளிபரப்பினால், ரஜினி – விஜய் என்று இருவருக்கும் பொதுவாக இருக்கும் ரசிகர்கள் தியேட்டர் பக்கம் போகமால் டிவி முன்பு உட்கார்ந்து விடுவார்களோ, என்று ரசிகர்கள் கவலை அடைந்துள்ளார்களாம்.
இருந்தாலும், தற்போது தமிழகத்தை பொறுத்தவரை பெரிய மாஸ் உள்ள நடிகர் என்றால் அது ரஜினி, விஜய் என்றாகிவிட்ட நிலையில், அன்றைய தினம் குடும்பங்கள் காலா கொண்டாடினாலும் ரசிகர்கள் சர்காரை நிச்சயம் கொண்டாடுவார்கள்.