
கார்த்தி, ஜோதிகா நடிக்க வெளிவரவிருக்கும் படம் தான் ‘தம்பி’. இப்படத்தின் டீசர் சில தினங்களுக்கு முன் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களிடையேயும் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் தமிழ்நாடு வெளியிடும் உரிமையை பிரபல நிறுவனமான SDC பிக்சர்ஸ் கைப்பற்றியுள்ளது.
இதற்கு முன் இந்நிறுவனம், தொரட்டி, திட்டம் போட்டு திருடுற கூட்டம்,காவியன், ஆகிய படங்களை வெளியிட்டனர். சேரன் நடிப்பில் உருவாகியுள்ள “ராஜாவுக்கு செக்”, திரிஷாவின் “கர்ஜனை” படங்களை வெளியிட இருக்கிறார்கள்.
இதற்கிடையில் கார்த்தியின் “தம்பி” படத்தையும் இந்நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
Facebook Comments