Spotlightசினிமா

நாங்கள் பொழுது போக்கிற்காக போராடவில்லை – சீமான் ஆவேசப் பேச்சு!

தி திரைக்களம் தயாரிப்பில் மு.களஞ்சியம் இயக்கியுள்ள படம் முந்திரிக்காடு. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

விழாவில் இயக்குநர் மு.களஞ்சியம் பேசியதாவது,

“அண்ணன் சீமான் சாதிய கட்டமைப்பிற்கு எதிரான எங்கள் முந்திரிக்காடு படத்தை மிகவும் கவனமாகப் பார்த்துக்கொண்டார். அண்ணன் சீமான் அவர்களுக்கு இப்பட டீம் மிகவும் நன்றியினை தெரிவித்து கொள்கிறது.

சசி சார் என்றால் எங்களுக்குப் பயம் உண்டு. அவர் எனக்கு ஒரு சகோதரர் போல. விவேகானந்தன் சார் எனக்கு முதல் படம் கொடுத்ததிற்கான காரணம் என்னுடைய செயல்பாடுகளை அவர் கவனித்து வந்தது தான். இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றியினைக் கூறிக்கொள்கிறேன்” என்றார்

அய்யா நல்லக்கண்ணு பேசியதாவது,

“எனக்கு களஞ்சியத்தைப் பார்க்கும் போதெல்லாம் படத்தைப் பற்றி கேட்பேன். ஏனென்றால் இன்று சினிமாவில் நிறையப் போட்டியிக்கிறது. நாங்களும் கொள்கை ரீதியாக நாடகம் போட்டோம். சீமான் சசி ராஜு முருகன் எல்லாம் இந்தக்கதைக்கு நெருக்கமானவர்கள். காதலித்தவன் செத்தாலும் காதல் நிற்கும். இந்தப்படம் ஆரம்பிக்கும் போது இருந்ததை விட இப்போது தமிழ்நாட்டில் ஆணவக்கொலைகள் அதிகமாக நடக்கிறது. படம் படம் பார்க்கத்தானா? அதில் கற்றுக்கொள்ள வேண்டும். இந்தப்படம் சீக்கிரம் வெளியில் வரவேண்டும். இந்தப்படத்தின் நல்ல கருத்துக்கள் மக்களிடம் சென்று சேர வேண்டும். இந்தப்படம் வெளிவந்த பின் ஆணவக்கொலைகள் குறையவேண்டும்” என்றார்

சீமான் பேசும்போது, ‘களஞ்சியத்தின் கனவுப்படைப்பாக முந்திரிக்காடு படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் நான் இடம் பெற்றதற்காக மிகவும் மகிழ்கிறேன். தம்பி பிரியன் இசை அமைத்து பாடல்களை என்னிடம் போட்டுக் காட்டினார். நான் கேட்டுவிட்டுப் பாராட்டினேன். பின்னணி இசையும் அருமையாக வந்திருக்கிறது. தம்பி களஞ்சியம் இமையத்தின் எழுத்தை அப்படி திரையில் வார்த்தெடுக்கிறார். இமையம் அவர்களின் எழுத்தை நம்பி தான் மு.களஞ்சியம் படத்தைத் தயாரித்து இருக்கிறார். புரட்சி என்றால் என்ன என்று எங்களுக்கு கற்று கொடுத்த மகேந்திரன் அவர்களின் மகன் தம்பி புகழுக்கு பட்டம் கொடுக்கச் சொன்னார் ராஜு முருகன்.

இங்கு எழுச்சி புரட்சி என்றால் என்ன என்பதே தெரியாதவன் எல்லாம் பட்டம் வைத்திருக்கிறான். அதனால் இந்தப் பட்டத்திற்கு தகுதியானவரின் மகனான தம்பி புகழுக்கு எழுச்சி நாயகன் என்ற பட்டத்தைக் கொடுக்கலாம். சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விசம் கலக்கட்டும் என்று கவிதை எழுதும் நிலையில் சமூகம் இருக்கிறது. தலைக்கு தொப்பி தைக்கிறவன் உயர்ந்தவன் காலுக்குச் செருப்பு தைத்தவன் கீழானவன் என்கிறான். இந்த முந்திரிக்காடு படம் பரியேறும் பெருமாள் ஏற்படுத்திய தாக்கத்தை விட அதிகத் தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு விழாவில் ஒரு நடிகர் பேசுகிறார்.

திஸ் பிலிம்ல சாங்க்ஸும், பைட்டும் பெண்டாஸ்டிக்கா வந்திருக்கு” என்கிறார். இந்தச் சனியன்களை வைத்து என்னடா பண்றது. நாக்குல கூட தமிழ் சரியா வரலியே நீங்க எப்படிடா நாட்டை சரி பண்ணுவீங்க. புறநானூறு சொல்கிறது நான்கு சாதிகள் தவிர இல்லை. எந்தச் சொல் உன்னை இழிச்சொல்லாகப் பயன்படுத்தப் படுகிறதோ, அந்தச் சொல்லை உனது ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டும்.

பெயரையே மொழியாக வைத்துக் கொண்ட சமூகம் நம் சமூகம்.

ஜாதி ஒழியாத வரை நம் சமூகம் அடிமையாகத் தான் இருக்க வேண்டும். நமக்குள் இருக்கும் சதிமத உட்பகை தான் நம்மை வீழ்த்துகிறது. நம்மை ஓர்மைப்படாமல் பார்த்துக் கொள்கிறது. சாதிய எண்ணம் கொண்டவன் இறைவனை வணங்கிவதற்கே தகுதி இல்லாதவன் . அவன் அரசியலுக்கு நாடு நாசமாகப் போய்விடும். என்கிறார் முத்துராமலிங்கத்தேவர்.சாதிய விடுதலை, மதவிடுதலை, பொருளாதார விடுதலை, எதுவுமே இன்னும் இந்தியாப் பெறவில்லை. வெறும் அரசியல் விடுதலை மட்டும் தான் பெற்றுள்ளோம். மருத்துவமனையில் ரத்தம் தேவைப்படும்போது எவனும் சாதி பார்ப்பதில்லை.

காரணம் சாதிக்கு ரத்தவெறி இருக்கு. ரத்தத்திற்கு சாதி வெறி இல்லை. கோயில்களில் இருக்கும் சாதி திரையரங்களில் செத்துப்போய்விட்டது. அதனால் இப்போது திரை அரங்குகளை அதிகப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. இந்திய நிலத்திலே பெருமைக்குரியவர் அய்யா நல்லக்கண்ணு அவர்கள் தான்.

நாங்கள் பொழுது போக்கிற்காக போராடவில்லை. எங்களுக்கு அடுத்த தலைமுறையாவது நன்றாக வாழவேண்டும் என்று தான் போராடுகிறோம். அப்படியான போராட்டக்காரர்களில் ஒருவனான தம்பி களஞ்சியம் இயக்கி இருக்கும் முந்திரிக்காடு பெரிய மாற்றத்தை உண்டுபண்ணும். இதைப் படமாக நான் பார்க்கவில்லை. ஒரு அரசியல் களமாகப் பார்க்கிறேன். இந்தப்படம் பெரிய அதிர்வலைகளை கிளப்பும்” என்றார்

Facebook Comments

Related Articles

Back to top button