Spotlightசினிமா

சீதா பயணம் – விமர்சனம்

எழுத்து & இயக்கம்: அர்ஜுன்

நடிகர்கள்: நிரஞ்சன், ஐஸ்வர்யா அர்ஜுன், துருவ் சார்ஜா , சத்யராஜ், பிரகாஷ் ராஜ், அர்ஜூன் (சிறப்பு தோற்றம்)

தயாரிப்பு: ஸ்ரீ ராம் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்

இசை: அனுப் ரூபன்ஸ்

ஒளிப்பதிவு: ஜி பாலமுருகன்

மிகப்பெரும் கோடீஸ்வரரான சத்யராஜின் மகளாக வருகிறார் ஐஸ்வர்யா அர்ஜூன். தாய் இல்லாததால், மகள் மீது தந்தைக்கும், தந்தை மீது மகளுக்கும் அளவு கடந்த அன்பு இருக்கிறது.

இந்நிலையில், கேட்ரிங் மீட்டிங் ஒன்றிற்காக தூரமாக காரில் செல்ல பயணப்பட ஆரம்பிக்கிறார் ஐஸ்வர்யா. இந்த பயணத்தில் வழியில் பலரை சந்திக்கிறார்.

அப்படியாக சந்திக்கும் மனிதர்களிடம் சின்ன சின்னதாக நேரத்தையும் செலவழித்துக் கொண்டு சென்று கொண்டிருக்கிறார். இறுதியில் கேட்ரிங் மீட்டிங் செல்லும் இடத்திற்கு லேட்டாக செல்கிறார் ஐஸ்வர்யா.

அவர் அந்த இடத்திற்குச் செல்லும் தருவாயில், அந்த பில்டிங் எதிர்பாராதவிதமாக தீவிபத்தில் சிக்கி வெடிக்கிறது. பலரும் அதில் இறந்துவிடுகின்றனர்.

லேட்டாக சென்றதால் தான், தான் உயிரோடு இருப்பதாகவும்.. வழியில் சந்தித்த நபர்களால் தான் தன் உயிர் இருப்பதை உணர்ந்த ஐஸ்வர்யா.. அந்த மனிதர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக மீண்டும் அவர்களை சந்திக்கச் செல்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்..

அதன் பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.

நாயகியாக ஐஸ்வர்யா அர்ஜூன், தனது கேரக்டரை மிக அழகாக செய்திருக்கிறார். ஆனாலும், ஒரு சில இடங்களில் இன்னும் பெட்டராக நடித்திருக்கலாமோ அல்லது அந்த கேரக்டரை இன்னும் மெருகேற்றிருக்கலாமோ என்று கூற வைத்துவிட்டார் ஐஸ்வர்யா.

கதையின் நாயகனாக நிரஞ்சன், ஆக்‌ஷன் காட்சிகளில் மட்டும் அதிரடி காட்டியிருக்கிறார். மற்ற இடங்களில் அந்த கதாபாத்திரத்தின் வலுவை அறியாமல் ஏனோ தானோவென்ற நடிப்பு தான் தெரிகிறது.

பிரகாஷ்ராஜ், சத்யராஜ் இருவரின் நடிப்பும் ஓவர் ஆக்டிங்கில் கண்ணீர் வர வைக்கின்றனர். முடியல விட்ருங்கன்னு சொல்ல வைத்து விடுகிறார்கள்.

துருவ் சார்ஜா மற்றும் அர்ஜூன் இருவரும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கின்றனர்.

இசை மற்றும் ஒளிப்பதிவு இரண்டும் படத்திற்கு நன்றாகவே கைகொடுத்திருக்கின்றன.

சீதா பயணம் என்பது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு எந்த வகையிலும் கவராது என்பதே படத்தின் ஒன்லைன் விமர்சனம் தான்…. நடிகர்களின் ஓவர் ஆக்டிங், இழுத்தடிக்கும் க்ளைமாக்ஸ் என நம்மை அதிகமாகவே இந்த படம் சோதனைக்குள்ளாக்கி விட்டது என்றே கூறலாம்.

Facebook Comments

Related Articles

Back to top button